முழங்கால் வலி நீங்க இந்த 5 யோகாசனம் போதும்!!
முழங்கால் வலி தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் சில யோகாசனங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விருக்ஷாசனம் (Tree pose or Vrikshasana)
விருக்ஷாசனம் (Tree pose or Vrikshasana) என்பது ஒரு காலில் நின்று யோகாசனம் செய்வதாகும். இந்த யோகாசனம் கால்களின் பலத்தை அதிகரிக்கும் மற்றும் மூட்டுகளுக்கு உதவியாக இருக்கும். இந்த யோகாசனம் கால்களுக்கு உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
வீரபத்ராசனம் (Virabhadrasana)
மார்பு, இடுப்பு, கால்களை வளைத்து இந்த ஆசனம் செய்யப்படுகிறது. இதனால் தசைகள் பலப்படும். இந்த ஆசனம் செய்வதன் மூலம் வலியுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூட்டுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
பூனை-மாடு போஸ் (Cat-Cow Pose)
பூனை-மாடு போஸ் (Cat-Cow Pose) மூலம் முதுகெலும்பு பலம் பெறும். இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளைத் தூண்டி வலியைக் குறைக்கும். கோர் தசைகள் பலமடைவதால் உடல் வலிமை பெறும்.
பாலாசனம் (Balasana)
பாலாசனம் செய்வதால் இடுப்பு, முதுகெலும்பு, தொடைகளின் தசைகள் பலப்படும். இடுப்பு வலியைக் குறைக்க இது ஒரு நல்ல வழி. மார்பு விரிவடைவதால் சுவாசப் பயிற்சிகள் மேம்படும்.
திரிகோணாசனம் (Trikonasana)
திரிகோணாசனத்தில் உடலை பக்கவாட்டில் வளைப்பதால் தசைகள் பலப்படும். மூட்டுகளின் அசைவுத்தன்மை அதிகரிப்பதால் வீக்கம் குறையும். வலிக்குக் காரணமான இறுக்கம் படிப்படியாக மறையும்.