MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Immunity: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் இவை தான்!

Immunity: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் இவை தான்!

குளிர்காலத்தில் நாம் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக கிடைக்கும். அதோடு, ஸ்கர்வி போன்ற நோய்களின் ஆபத்தும் குறையும். அவ்வகையில், குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி காண்போம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Jan 03 2023, 08:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
fruits

fruits

குளிர் காலத்தில் இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இத்தகைய சூழலில் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும், பருவகால மாற்றங்களுடன் போட்டியிடவும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பொருட்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம். சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, தினந்தோறும் ஆண்களுக்கு 90 மி.கிராம் மற்றும் பெண்களுக்கு 75 மி.கிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது. ஆகையால், குளிர்காலத்தில் நாம் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக கிடைக்கும். அதோடு, ஸ்கர்வி போன்ற நோய்களின் ஆபத்தும் குறையும். அவ்வகையில், குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் தினந்தோறும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட ஆரம்பித்தால், வைட்டமின் சி-க்கு வேறு எதையும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. இதை சாப்பிடுவதால், உடலில் கொலாஜன் என்ற புரதம் உருவாகிறது. இது காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செல்களை வலுப்படுத்துகிறது. மேலும் இரத்த சோகை அபாயத்தை நீக்குகிறது.  

35

திராட்சை

பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லுடீன் மற்றும் எலாஜிக் அமிலம் ஆகியவை திராட்சையில் அதிகளவில் நிறைந்துள்ளது. இவை சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. மேலும் இது நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் கருதப்படுகிறது. குளிர்காலப் பழமான திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் செரிமான அமைப்பு, மற்றவர்களை விடவும் சிறப்பாக இருக்கும். இது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது. மேலும் பல பருவகால நோய்களையும் தடுக்கிறது.
 

45

பேரிக்காய்

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. இதைப் சாப்பிடுவதன் மூலம், இரத்த நாளங்கள் திறக்கத் தொடங்கி, இரத்த ஓட்டம் சாதாரணமாகிறது. இதில் வைட்டமின் சி அளவு 7 மி.கி. உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் நல்ல அளவில் நிறைந்துள்ளது. பேரிக்காயின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பேருதவியாக இருக்கிறது.
 

55

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் பல வகையான சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி, பி6, தியாமின், தாமிரம், இரும்பு, பொட்டாசியம், ஃபோலேட், ரிபோஃப்ளேவின் மற்றும் ப்ரோமைலைன் உள்ளது. குளிர் காலத்தில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kulukku Roti: குலுக்கு ரொட்டி..கேழ்வரகு மாவில் இப்படி ஒரு இனிப்பா? கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து செம டேஸ்ட்!
Recommended image2
Egg Yolk Benefits: முட்டையோட மஞ்சள் கருவை தூக்கி போடுறீங்களா? இவ்வளவு சத்துகளை மிஸ் பண்றீங்க!
Recommended image3
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved