ஆன்டிபயாடிக் மாத்திரை அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்த சின்ன மாத்திரையால் வரும் 5 பாதிப்புகள் தெரியுமா?
அண்மைகாலமாகவே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இத்தொகுப்பு விளக்குகிறது.
உடலுக்கு சின்ன பாதிப்பு வந்தாலும் உடனே மாத்திரை போட்டு கொள்ளும் பழக்கம் இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது. தலைவலியா? எடு மாத்திரை.. கால் வலியா? மாத்திரை போடு என எதற்கெடுத்தாலும் மெடிக்கலில் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிடும் போக்கு அதிகமாகிவருகிறது. அந்த வலி ஏன் வருகிறது? அதற்கு மருந்து தேவையா இல்லையா என்பதை நாமே தீர்மானித்து கொள்கிறோம். ஆனால் மருத்துவர்கள் இப்படி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் தற்காலிக தீர்வு தரும்; ஆனால் பின்னாளில் பாதிப்பு உண்டு செய்யும். அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டால் வரும் பாதிப்புகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் ஆரோக்கியம் கெடும்
லேசான காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதும் ஆன்டிபயாட்டிக் மாத்திரையை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க மக்கள் கிளம்பி விடுகின்றனர். ஆனால் இதனால் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். சென்டர்ஸ் பார் டிசிஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன் (Centers for Disease Control and Prevention) சொல்லும் தகவல்களின்படி, சளி, இருமல் என அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொண்ட 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்களின் பெற்றோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கொடுத்தது தான் காரணம் என சொல்லப்படுகிறது.
குடல் பாதிப்பு
நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் குடல் இயக்கத்தை பராமரிக்கும். இதனால் நம்முடைய செரிமானம், நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும். ஆனால் அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மாத்திரையை எடுத்துக் கொண்டால் கெட்ட பாக்டீரியாக்களுடன் சேர்ந்து நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து விடும். இதனால் வேறு சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம்.
மருந்துகளின் தவறான பிணைப்பு
அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், மற்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளின் ஆற்றல் நீர்த்து போகும். ஏற்கனே வேறு நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்குள் செல்லும் இரு மாத்திரைகளும் கலப்பு செய்துவிடும். இதனால் நம் உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆகவே மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தவறு.
ஆன்டிபயாடிக் மாத்திரை வேலை செய்யாது.. ஏன்?
பாக்டீரியா தன் உடலமைப்பை மாற்றும் தன்மை கொண்டது. சில நோய்க்கு முன்பு நாம் மருந்து உட்கொண்டிருப்போம். அதனால் உடலில் அந்த பாக்டீரியாவை எதிர்க்க சக்தி பெருகி இருக்கும். இப்போது மீண்டும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை போடும்போது அந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மழுங்கிவிடும். எடுத்துக்காட்டாக, காய்ச்சல், டைஃபாய்டு, நுரையீரல் தொற்று போன்ற நோய்களுக்கு நீங்கள் மருந்து (ஆன்டிபயாடிக் மாத்திரை) எடுத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மறுபடியும் அதே நோய்க்கு அந்த மாத்திரையை பயன்படுத்தும்போது அந்த வீரியம் இருக்காது. ஏனெனில் அந்த பாக்டீரியா தன் வடிவமைப்பை மாறியிருக்கும். அதனால் மருந்து வேலை செய்யாது. அதனால் உங்கள் இஷ்டத்திற்கு மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
இதையும் படிங்க: சீதாப் பழத்தின் இனிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு கூட தீங்கு செய்யாது..கொட்டி கிடக்கும் சத்துக்கள் அப்படி..!
பூஞ்சை தொற்று அலர்ட்
அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரை உட்கொண்டால் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகும். இதனால் பூஞ்சை தொற்று நம்மை எளிதில் தாக்கலாம். காதுகள், வாய், தொண்டை மாதிரியான உறுப்புகளில் பூஞ்சை தொற்று பாதிப்பு வரும். சில பெண்களுக்கு வஜைனாவில் கூட தொற்று ஏற்பட காரணமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல அக்னி மூலையை இப்படி சரி செய்தால், எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டம் கூட நீங்கும்..!