MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • kidney stone:சிறுநீரக கல்லை கரைக்க காச கரியா செலவு பண்ணாம இதை ட்ரை செய்து பாருங்க!3 நாட்களில் சூப்பர் ரிசல்ட்!

kidney stone:சிறுநீரக கல்லை கரைக்க காச கரியா செலவு பண்ணாம இதை ட்ரை செய்து பாருங்க!3 நாட்களில் சூப்பர் ரிசல்ட்!

சிறுநீரக கல் பிரச்சனையை சரி செய்ய சிறுபீளை மூலிகையை எப்படி பய்னபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம் 

2 Min read
Author : Web Team
Published : Apr 05 2023, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இன்றைய அவசர உலகத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவர்க்கும் சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த சிறுநீரக கல் பிரச்சனையை சரி செய்ய சிறுபீளை மூலிகையை எப்படி பய்னபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கல்லானது சிறுநீரகத்திலும் இருந்தாலும் சரி, சிறுநீர்க் குழாயில் இருந்தாலும் சரி அதனை லாவகமாக எடுத்து விடும் சக்தி இந்த மூலிகை செடிக்கு உள்ளது.

சிறுபீளை மூலிகைக்கு சிறுகண்பீளை, கண்பீளை, சிறுபீளை, பொங்கல் பூ போன்ற பெயர்களும் உண்டு. இந்த செடியின் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் இதனை சிலர் தேங்காய்ப் பூ என்றும் அழைப்பார்கள். இதனை நாம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பார்த்து இருப்போம். தவிர தரிசு நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23

தை திருநாளாம் பொங்கல் அன்று இதனை காப்பு கட்டி, தோரணம் கட்டி பயன்படுத்துவார்கள். இந்த செடியின் பெரும் பயனே ஆபத்தான நேரங்களில் நம்மைப் பாதுகாக்க நாம் அங்கும் இங்குமாக வெளியில் மருந்தைத் தேடி அலையாமல் இருப்பதற்கு தான் .

சிறுபீளையின் இலை ,பூ, தண்டு, வேர் என இந்த செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ தன்மை பெற்றவை. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகை பூக்களில் சிறுபீளைப் பூவும் ஒன்றாகும். இதை நம் உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் சார்ந்த கோளாறுகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கக் கூடியது.

இந்த செடி கிடைக்காதவர்கள் இதனை அருகில் இருக்கும் நாட்டு மருந்தகங்களில் கிடைக்கும் உலர்ந்த இலைகளை வாங்கி உபயோகிக்கலாம்.

33

சிறுபீளையை எப்படி பயன்படுத்துவது:

சிறுபீளை ஜூஸ்:

இந்த மூலிகையை கைப்பிடி அளவிற்கு பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளில் வண்டு அல்லது பூச்சிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு பின் அதனை தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இலைகளை பறிக்கும் போது பூவுடன் சேர்த்து பறிக்க வேண்டும். இந்த பூ மற்றும் இலைகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதில் 1.5 அளவிலான தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு பருக வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு காலை, மாலை என்று இரு முறை செய்து பருக வேண்டும்.

சிறுபீளை கஷாயம்:

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிலான தண்ணீர் ஊற்றி 50 கிராம் சிறுபீளையின் உலர்ந்த அல்லது பச்சையான இலைகளை சேர்த்து, அது 1/4 லிட்டராக மாறும் வரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

மிதமான சூட்டில் இருக்கும் போது இதில் தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்து மிக்ஸ் செய்து அருந்தலாம். இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை என்று இரு முறை செய்து பருகினால் போதும். சிறுநீரக கல் கரைந்து சிறுநீரகம் வழியே வெளியேறிவிடும்.

இதர பயன்கள்:

அதோடு மட்டுமல்லாமல் ஹைட்ரோ நெஃப்ரோசிஸ் எனப்படும் சிறுநீரக வீக்கமும் குறையும்.

சிறுநீரக கற்களால் உண்டாகும் வலியையும் நீக்கும்.

ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது உண்டாகக்கூடிய எரிச்சலையும் நீக்குவதோடு, சிறுநீரில் ரத்தம் போவதையும் சரி செய்கிறது.

நீங்கள் இந்த ராசியா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு! பார்த்து நடந்துக்கோங்க!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Immunity Foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பரான 7 உணவுகள்
Recommended image2
Heat Wave : சுட்டெரிக்கும் வெயிலில் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
Recommended image3
பட்டுப் போன்ற கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய்ப் பால்: 5 எளிய வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved