- Home
- Gallery
- அச்சு அசல் அப்பா விஜய்யின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கும் ஜேசன் சஞ்சய் - தளபதி மகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ
அச்சு அசல் அப்பா விஜய்யின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கும் ஜேசன் சஞ்சய் - தளபதி மகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாளையொட்டி அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

jason sanjay
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு சில குறும்படங்களையும் இயக்கினார். அதன் பின்னர் ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து நேரடியாக தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கிவிட்டார். அவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளிவந்தாலும் அதன் பின்னர் அப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
Director jason sanjay
விஜய்க்கு அவரது மகனை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை. அதற்காக சில இயக்குனர்களிடம் கதையும் கேட்டிருக்கிறார் தளபதி. அப்படி ஒரு நாள் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், விஜய் மகனுக்காக சொன்ன கதை தளபதிக்கு மிகவும் பிடித்துப் போக, அதில் நடிக்க சஞ்சய் எப்படியாவது சம்மதித்துவிட வேண்டும் என வேண்டினாராம். ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என சொல்லிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... Raayan Movie Review : 50வது படத்தில் அதகளப்படுத்தினாரா தனுஷ்? ராயன் படத்தின் விமர்சனம் இதோ
Vijay son jason sanjay
பின்னர் தான் உனக்கு எதில் விருப்பமோ அதை செய் என விஜய்யும் அவர் விருப்பதிற்கே விட்டுவிட்டார். வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்த சஞ்சய்க்கு இயக்குனராக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்துள்ளது. அந்த ஆசையும் தற்போது நனவாகி இருக்கிறது. அவர் கோலிவுட்டில் படம் இயக்க தயாராகி வருகிறார். அவர் இயக்கும் முதல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Vijay, jason sanjay
இந்நிலையில், விஜய் மகன் சஞ்சய் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதையொட்டி அவரின் சமீபத்திய கேண்டிட் புகைப்படங்கள் சில வெளியாகி இருக்கின்றன. அதில் அச்சு அசல் விஜய்யை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் இருக்கிறார் சஞ்சய். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் ஹீரோவாக நடித்தால் தளபதி இடத்தை ஈஸியாக பிடித்துவிடுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது என்னடா சிங்கபெண்ணுக்கு வந்த சோதனை? தடாலடியாக அடுத்தடுத்து டாப்புக்கு வந்த 2 விஜய் டிவி தொடர்கள்!