- Home
- Gallery
- தவ்லூண்டு இருந்த பசங்க... இப்போ எப்படி வளந்துட்டாங்க! வைரலாகும் விஜய் சேதுபதி மகன், மகளின் லேட்டஸ்ட் போட்டோ
தவ்லூண்டு இருந்த பசங்க... இப்போ எப்படி வளந்துட்டாங்க! வைரலாகும் விஜய் சேதுபதி மகன், மகளின் லேட்டஸ்ட் போட்டோ
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன், மகள் ஆகியோரின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

vijay sethupathi family
சீனு இராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சூது கவ்வும், பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றார் விஜய் சேதுபதி. இதையடுத்து அவருக்குள் இருந்த வில்லத்தனமான நடிப்பை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் தான் பேட்ட. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் சேது.
vijay sethupathi family photo
இதன்பின்னர் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பவானி என்கிற பவர்புல்லான கேரக்டரில் நடிக்க வைத்து விஜய் சேதுபதியின் வில்லன் இமேஜை தூக்கி நிறுத்தினார் லோகேஷ் கனகராஜ். பின்னர் கமலின் விக்ரம் படத்திலும் சந்தானம் என்கிற அறிவாளி வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்து அழகு பார்த்தார் லோகேஷ். தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க செம்ம டிமாண்ட் நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பெங்களூரு விசிட்.. தான் பிறந்த கிராமத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஆசி பெற்று சென்ற ரசிகர்கள்!
vijay sethupathi son Surya
அந்த வகையில், தெலுங்கில் உப்பென்னா என்கிற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து தற்போது ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் வில்லனாக களமிறங்கி இருக்கிறார் மக்கள் செல்வன். இப்படி ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஆல் ஏரியாவிலும் கில்லி போல் நடித்து அப்ளாஸ் வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி.
vijay sethupathi son surya and daughter shreeja
இவருக்கு சூர்யா என்கிற மகனும், ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்துள்ளனர். சூர்யா, விஜய் சேதுபதி உடன் சிந்துபாத் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஸ்ரீஜாவும் முகிழ் என்கிற படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். படங்களில் நடிக்கும்போது தவ்லூண்டு இருந்த இருவரும் தற்போது மளமளவென வளர்ந்துவிட்டனர். சமீபத்தில் ஓணம் கொண்டாடியபோது தன் தந்தை விஜய் சேதுபதி உடன் ஸ்ரீஜாவும், சூர்யாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... https://tamil.asianetnews.com/television/jeevanandham-is-shocked-when-venba-said-ishwari-you-are-looks-like-my-mother-ethirneechal-update-mma-s090w6