தல தளபதிக்கு செம ஜோடி இவங்க.. நடிகை சுவலட்சுமியை நியாபகம் இருக்கா? இப்போ எங்கே? எப்படி இருகாங்க தெரியுமா?
Actress Suvalakshmi : சினிமா உலகத்தில் வெகு சில ஆண்டுகளே பயணித்தாலும், தல அஜித் மற்றும் தளபதி விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து, திரையுலக வாழ்க்கையில் இருந்து வெகு சீக்கிரத்தில் ஓய்வு பெற்ற நடிகை தான் சுவலட்சுமி.
Aasai Movie
கொல்கத்தாவில் பிறந்து கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு பெங்காலி திரைப்படத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமான நடிகை நான் சுவலட்சுமி. அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களுடைய "ஆசை" திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த படத்தில் வரும் பாடல்களும், சுவலட்சுமியின் நடிப்பும் இன்றளவும் பெரிய பாராட்டுகளை பெற்று வருகின்றது என்றால் அது மிகையல்ல.
Friends Movie
லவ் டுடே மற்றும் நிலவே வா உள்ளிட்ட திரைப்படங்களில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த சுவலட்சுமி, முரளி, இளைய திலகம் பிரபு மற்றும் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். தமிழ் மட்டுமல்லாமல் ஒரு கன்னட மற்றும் தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான Friends படத்தில், விஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சுவலட்சுமி என்பது பலர் அறியாத உண்மை. அதே போல தேவயானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது ஜோதிகா தான்.
Suvalakshmi Husband
பொதுவாக நடிகைகள் என்றாலே கிளாமர் என்கின்ற ஒரு விஷயம் அவர்களுடைய கதாபாத்திரத்தில் தொற்றிக் கொள்ளும். ஆனால் அவர் திரைத்துறையில் பயணித்த 9 ஆண்டுகளும் குடும்பம் பாங்கான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.
கடந்த 2002 ஆண்டு பிரபல தொழிலதிபரும் பேராசிரியருமான ஸ்வகடோ பானர்ஜியை திருமணம் செய்து கொண்டு ஜெனிவா மற்றும் சன் பிரான்சிஸ்கோ நகரங்களில் வாழ்ந்து வந்த இவர், தற்பொழுது தனது கணவரின் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.