மணிக்கு 160 கி.மீ வேகம்.. இந்தியாவை கலக்கும் வந்தே பாரத்.. அறிமுகமாகும் Sleeper Version - புகைப்படங்கள் உள்ளே!
இந்தியா முழுவதும் சுமார் 34 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 16 பெட்டிகள் கொண்ட 14 ரயில்களும், எட்டு பெட்டிகள் கொண்ட 20 வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Vande Bharath Sleeper
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நிலவரப்படி இந்திய அளவில் 34 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசிக்கு முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
Vande Bharath Sleeper Version
அதேபோல சென்னையில் இருந்து மைசூருக்கும், சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கும் மேலும் எக்மோரில் இருந்து திருநெல்வேலிக்கும் தற்பொழுது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 24ம் தேதி மட்டும் 9 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
Vande Bharath Train
சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களில் இதுவரை அமர்ந்து பயணம் செய்யும் வண்ணமே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
நிலவில் கால் பதித்த விக்ரம், பிரக்யான் ஏன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை? இதுதான் காரணம்!!