கிடு, கிடுவென உயர்ந்த பூண்டு, இஞ்சி, வெங்காயம் விலை.! திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான பூண்டு, இஞ்சி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது திடீர் அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்துள்ளனர். வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உச்சத்தில் பூண்டு விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த காய்கறிகள் விலையானது சற்று உயர்ந்துள்ளது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூண்டு 300 முதல் 375 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொத்தவரை விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Koyembedu
வெண்டைக்காய் விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 170 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது