Vegetables : கிடு. கிடுவென உயரும் கேரட் விலை.! சரிந்த தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் ஒரு சில காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கேரட். அவரைக்காய் விலை அதிகரித்துள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை நிலவரம்
பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
புடலங்காய் விலை சரிவு
பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்!
உச்சத்தில் மாங்காய் விலை
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது