ரூ.200 கோடி சம்பளம்... சொந்தமாக பிரைவேட் ஜெட் என ராஜவாழ்க்கை வாழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் Net Worth இதோ
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Rajinikanth
ஒரு நடிகர் படம் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறும் நிகழ்வு சில நடிகர்களுக்கு மட்டுமே அமையும். அப்படி திருவிழாவாக வெளியாகும் படம் ஒரு ஹீரோவை சூப்பர்ஸ்டாராக மாற்றும் மேஜிக்கும் சிலருக்கு தான் சாத்தியம். ஸ்டைலா யார் வேண்டுமென்றாலும் நடிக்கலாம், ஆனால் ஸ்டைல்னு சொன்னா ஒருவர் தான் நியாபகத்துக்கு வருவார் என்றால் அது ரஜினிகாந்த் ஆக மட்டும் தான் இருக்க முடியும். தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத நடிகராக இருப்பது மட்டுமின்றி, எத்தனை தலைமுறை புது நடிகர்கள் வந்தாலும் தன்னுடைய சூப்பர்ஸ்டார் இமேஜை தனிக்காட்டு ராஜாவாக கட்டிப்பாதுகாத்து வருகிறார் ரஜினி.
Rajinikanth Birthday
அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் வரை தமிழ் சினிமாவில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் கட்டிப்போட்டு வைத்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Rajinikanth salary
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ஜெயிலர் படத்துக்கே அவருக்கு சம்பளம் மற்றும் ஷேர் தொகை என மொத்தமாக சேர்த்து ரூ.200 கோடி வரை கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் அடுத்ததாக நடிக்க உள்ள தலைவர் 171 படத்துக்கு சம்பளம் மட்டும் ரூ.210 கோடி பேசப்பட்டு உள்ளதாம். அந்த அளவுக்கு ரஜினியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth Net worth
நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடும் உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி இருக்குமாம். இதுதவிர திருமண மண்டபம் ஒன்றையும் நடத்தி வருகிறார் ரஜினி, அதன் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ரஜினி சொந்தமாக பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறாராம். இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம் பாபா படத்தை ரஜினி தயாரித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார் ரஜினி.
Rajinikanth car collection
சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டிலும் நிறைய முதலீடு செய்துள்ளார் ரஜினி. இவரிடம் பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் இருக்குமாம். அதோடு தான் ஆரம்ப காலகட்டத்தில் பயன்படுத்திய ப்ரீமியர் பத்மினி, அம்பாசிடர் போன்ற கார்களையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் ரஜினி. இப்படி ஆடம்பர பொருட்கள் நிரம்பி இருந்தாலும் என்றென்றும் மாறாத அவரின் எளிமை தான் அவரை சூப்பர்ஸ்டார் ஆக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதையும் படியுங்கள்... ஸ்டைலிஷ் ஆக்டர் முதல்.. தாதாசாகேப் பால்கே வரை.. 48 வருட திரை வாழ்கை - ரஜினிகாந்த் பெற்ற விருதுகள் ஒரு பார்வை!