- Home
- Gallery
- கமல் அண்ணன் சாருஹாசனுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி - ஹெல்த் அப்டேட் கொடுத்த சுஹாசினி
கமல் அண்ணன் சாருஹாசனுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி - ஹெல்த் அப்டேட் கொடுத்த சுஹாசினி
நடிகர் கமல்ஹானின் அண்ணனும், சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Charuhasan
கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கும் இவருக்கும் 23 வயது வித்தியாசம். இவர் தபரன கதே என்கிற கன்னட படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார். இவருக்கு தற்போது 93 வயது ஆகிறது. இந்த வயதிலும் விஜய் ஸ்ரீ இயக்கிய ஹரா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் சாருஹாசன்.
Kamalhaasan brother Charuhasan
நடிகர் சாருஹாசனுக்கு மூன்று மகள்கள், அதில் ஒருவர் தான் சுஹாசினி. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப்பறந்த சுஹாசினி பின்னர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். சாருஹாசன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் புதிய சங்கமம், ஐபிசி 215 ஆகிய இரு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... இன்று ஒரு படத்திற்கு 25 கோடி வாங்கினாலும் அந்த சந்தோசம் கிடைக்கல! முதல் சம்பளம் குறித்து பேசிய நானி!
Charuhasan, Suhasini
மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் சாருஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் தாதா 87 மற்றும் ஹரா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. 93 வயதிலும் நடித்து வந்த சாருஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Suhasini insta post about charuhasan
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் தந்தையை கட்டியணைத்தவாரு புகைப்படம் எடுத்துக்கொண்ட சுஹாசினி, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய தந்தைக்கு மருத்துவ வெக்கேஷன், மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் மகள்களின் கவனிப்புடன் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், அவரை பார்த்துக்கோ சுஹாசினி, மிகவும் அரிய மனிதர் என கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிகனா OK; ஆனா பன்முகத்திறமையாளராக தனுஷ் கிட்டகூட நெருங்க முடியாத ரஜினி! அதில் சூப்பர்ஸ்டார் சறுக்கியது ஏன்?