- Home
- Gallery
- நடிகனா OK; ஆனா பன்முகத்திறமையாளராக தனுஷ் கிட்டகூட நெருங்க முடியாத ரஜினி! அதில் சூப்பர்ஸ்டார் சறுக்கியது ஏன்?
நடிகனா OK; ஆனா பன்முகத்திறமையாளராக தனுஷ் கிட்டகூட நெருங்க முடியாத ரஜினி! அதில் சூப்பர்ஸ்டார் சறுக்கியது ஏன்?
தனுஷ் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளராக கலக்கி வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அந்த விஷயத்தில் சறுக்கியது பற்றி பார்க்கலாம்.

Raayan
கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். உழைப்புக்கு நிச்சயம் உயர்வு உண்டு என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. 12ம் வகுப்பில் பெயில் ஆனதும் சினிமாவில் அப்பாவின் தயவுடன் அறிமுகமானாலும் அவர் சந்தித்த விமர்சனங்கள் ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் என எண்ண வைத்தது. அந்த அளவுக்கு அவரின் தோற்றத்தையும் நடிப்பையும் பலர் விமர்சனம் செய்தனர்.
Dhanush
கருப்பா இருந்தா சினிமாவில் சாதிக்க முடியாது என்பதை உடைத்தெறிந்தவர் ரஜினிகாந்த், அவரைப்போலவே ஒல்லியாக இருந்தாலும் சினிமாவில் மாஸ் ஹீரோ ஆகலாம் என்று நிரூபித்து காட்டியவர் தனுஷ். நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகரான தனுஷ், அவரைப்பார்த்து தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இன்று ரஜினியின் மருமகன் ஆன பின்னும் அவர் மீதுள்ள கிரேஸ் தனுஷுக்கு குறையவில்லை. இப்படி தனுஷ், ரஜினியை ஒரு லெஜண்டாக பார்த்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Rajinikanth, Dhanush
அப்படி தனுஷ் இன்று சினிமாவில் பன்முகத்திறமையாளராக ஜொலித்தாலும் அவர் அளவுக்கு ரஜினியால் சாதிக்க முடியவில்லை. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் சாதித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் தனுஷ் தான். ஆரம்பத்தில் நடிகராக மட்டும் இருந்த தனுஷ், பின்னர் பாடகர் ஆனார், அதைத் தொடர்ந்து பாடலாசிரியர் ஆனார். அதுவும் சக்சஸ் ஆனதால் தயாரிப்பாளர் ஆனார். அதிலும் வெற்றிகிட்டியதை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இதையும் படியுங்கள்... வட போச்சே... ரஜினியின் பிளாப் படத்துக்கு ஆசைப்பட்டு ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ
Dhanush vs Rajini
நாட்டு சரக்கு பாடல் முதல் ராயனில் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து தனுஷ் பாடிய அடங்காத அசுரன் பாடல் வரை அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அவர் எழுதிய பாடல் வரிகளும் கவனம் ஈர்த்துள்ளன. மறுபுறம் தயாரிப்பாளராக அவர் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிசட்டை, காக்கா முட்டை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் இயக்குனராக பா.பாண்டி, ராயன் என அவர் இயக்கிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
All Rounder Dhanush vs Superstar Rajinikanth
இதையெல்லாம் ரஜினியும் பண்ணி இருக்கிறார். வள்ளி, பாபா போன்ற படங்களின் கதை ரஜினியுடையது தான். அந்த இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் அடுத்து அந்தபக்கம் ரஜினி செல்லவில்லை. அதேபோல் லோட்டஸ் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் ரஜினி தயாரித்த பாபா படம் படுதோல்வி அடைந்ததால் படத்தயாரிப்பையும் கைவிட்டார் ரஜினி. இதுதவிர பாடகராக மன்னன் படத்திலும் கோச்சடையான் படத்திலும் பாடி இருக்கிறார். அதுவும் கிளிக் ஆகாததால் அதையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு நடிகனாக சாதித்த ரஜினி, ஒரு பன்முகத்திறமையாளராக சாதிக்க முடியவில்லை. அதனால் அந்த விஷயத்தில் தனுஷ் கிட்டகூட ரஜினியால் நெருங்க முடியாது என்பது தான் உண்மை.
இதையும் படியுங்கள்... லோகேஷ் இயக்கத்தில் கூலி.. பெரிய ஆஃபருக்கு "நோ" சொன்ன டாப் நடிகர் - என்ன காரணம்?