- Home
- Gallery
- ரூ.37 லட்சம் மதிப்பில் நகைகள்.. ஆடம்பர பங்களா.. ஸ்மிருதி இரானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ரூ.37 லட்சம் மதிப்பில் நகைகள்.. ஆடம்பர பங்களா.. ஸ்மிருதி இரானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ஸ்மிருதி இரானி கடந்து வந்த பாதை அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் ஆச்சர்யத்தை அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் இதில் தோல்வி அடைந்துள்ளனர். அதில் முக்கியமானவர் ஸ்மிருதி இரானி. அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி தோல்வியடைந்தார்.
smriti irani
2019ல் அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் பிரபலமான ஸ்மிருதி இரானி இந்த முறை படு தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்மிருதி இரானி கடந்து வந்த பாதை அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி. மாடலாக தனது கெரியரை தொடங்கிய அவர் தனது நடிப்புத் திறமையால் பலரின் இதயங்களை வென்றார், பின்னர் நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக மாறினார். அரசியல்வாதியானார். அவர் 'லால் சலாம்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. தனது வெற்றிக் கதைகளுக்கும் சில சர்ச்சைகளுக்கும் தலைப்புச் செய்தியாக இருந்தார்.
ஸ்மிருதி இரானி, தனது கனவுகளை நிறைவேற்றுவதற்காக மிக இளம் வயதிலேயே மும்பைக்கு வந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு மாடலிங் உலகில் நுழைந்தார். ஸ்மிருதி மிஸ் இந்தியா 1998-ல் போட்டியிட்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரானார்.
பின்னர் பல ஆண்டு கடின உழைப்புக்கு ஸ்மிருதி ஏக்தா கபூரின் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற தொலைக்காட்சி தொடரின் நாயகி ஆனார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துளசி விராணியாக நடித்த அவரது நடிப்புத் திறமையை பலரையும் ஈர்த்தது. Kya Hadsaa Kya Haqeeqat, Ek Thi Nyaaka போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஸ்மிரிதி இரானி நடித்திருந்தார்..
2001 முதல் 2005 வரை இந்தியத் தொலைக்காட்சி அகாடமியால் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றார். தனது நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
2003-ல் பாஜகவில் இணைந்த ஸ்மிருதி இரானி, தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். 2004-ல் அவர் மகாராஷ்டிரா இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2019 மக்களவை தேர்தலில் ஸ்மிருதிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
Smriti Irani
இதனிடையே ஜூபின் இரானி என்ற தொழிலதிபரை ஸ்மிருதி 2001 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜோர் மற்றும் ஜோயிஷ் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
smriti irani
ஸ்மிருதி இரானி 2021ல் தனது முதல் புத்தகமான ‘லால் சலாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் பார்வையாளர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. ஏப்ரல் 2010 இல் தண்டேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் மத்திய போலீஸ் படைகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
smriti irani
ஸ்மிருதி இரானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.17 கோடி என்று அவர் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தார். ஸ்மிருதி இரானி சொத்து மதிப்பு ரூ. 8 கோடி, அவரது கடன்கள் ரூ. 21 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. பல சொகுசு கார்களும், அமேதியில் ஆடம்பர பங்களாவும் அவருக்கு உள்ளது.
Smriti Irani
அதே போல் தன்னிடம் ரூ.37 லட்சம் மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும் ஸ்மிருதி இரானியின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் தனது வருமானம் ரூ.6 லட்சம் என்று அவர் தெரிவித்துள்ளார்.