- Home
- Gallery
- 3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; சினிமாவில் சிங்கப்பெண்ணாய் வலம் வரும் இந்த நடிகை யார் தெரியுமா? ஆனா வனிதா இல்ல
3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; சினிமாவில் சிங்கப்பெண்ணாய் வலம் வரும் இந்த நடிகை யார் தெரியுமா? ஆனா வனிதா இல்ல
80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Radhika
தமிழ் சினிமா கொண்டாடிய ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவர் எம்.ஆர்.ராதா. அவரின் மகள் தான் ராதிகா. 1962-ம் ஆண்டு பிறந்த நடிகை ராதிகாவை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா, அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் கடந்த 1978-ம் ஆண்டு ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ராதிகா.
Radhika Sarathkumar
முதல் படத்திலேயே ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அவர் நடித்த முதல் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ராதிகா.
Radhika Sarathkumar photos
1980-களில் கோலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வந்த ராதிகா, கடந்த 1985-ம் ஆண்டு இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரதாப் போத்தன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மட்டுமின்றி அப்படத்தை தயாரித்தும் இருந்தார் ராதிகா.
Sarathkumar wife Radhika
மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து அவரை அந்த ஆண்டே திருமணமும் செய்துகொண்டார் ராதிகா. ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்... பில்டப் கொடுத்தும் வேலைக்கு ஆகல.. பாக்ஸ் ஆபிஸில் புஷ்வானம் ஆன ஸ்டார் - ஒரே வாரத்தில் இம்புட்டு தான் கலெக்ஷனா?
Radhika Sarathkumar Love
பிரதாப் போத்தனை பிரிந்த பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ராதிகாவுக்கு ரிச்சர்டு ஹார்டி என்பவருடன் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. கடந்த 1990-ம் ஆண்டு அவரை மனந்த ராதிகாவுக்கு ரயானே என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. ராதிகாவின் இந்த திருமண வாழ்க்கையும் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது.
Radhika family
இதையடுத்து நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் போன்ற படங்களில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட ராதிகா, அவரையே மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ராகுல் என்கிற மகனும் உள்ளார்.
Radhika Sarathkumar politics
மகன் பிறந்த பின்னர் படிப்படியாக சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிய ராதிகா, சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி போன்ற ஏராளமான ஹிட் சீரியல்களில் நடித்தார். அதுமட்டுமின்றி ராடன் மீடியா என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ராதிகா அதன் மூலம் சீரியல், வெப் தொடர் மற்றும் படங்களை தயாரித்தும் வருகிறார்.
Radhika Sarathkumar childhood Photo
அண்மையில் அரசியலில் நுழைந்த ராதிகா சரத்குமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இப்படி சினிமா, அரசியல் என கலக்கி வரும் ராதிகா சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சூப்பர் ஆக்டிங் ராஷ்மிகா மந்தானா ஜி: ஒரு குட்டி கதை சொல்லவா? கேரளா காங்கிரஸ் பொளேர்!