- Home
- Gallery
- 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு' தொகுப்பாளர்... அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வதந்தி!
'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு' தொகுப்பாளர்... அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வதந்தி!
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய, இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீது. இவரின் தரணித்துவமான குரலும், அழுத்தம் திருத்தமான பேச்சும் மிகவும் பிரபலம். வானொலியை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 'லலிதாவின் பாட்டு பாட்டு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது.
பல வருடங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில்... மேடையில் குலுக்கல் முறையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவருக்கு அப்போதே பரிசுகள் வழங்கப்படும்.
ஜிவி பிரகாஷை சிறு வயதில் பேட்டி கண்டு.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பாடலை பாடவைத்து பெருமை இவரை தான் சேரும். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்துல் ஹமீத் உடல்நல குறைவால், காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவிய, இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், "சில மணி நேரங்களாக அப்துல் ஹமீது காலமானார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் அவரது தரப்பு இது வதந்தி, இலங்கையில் நல்ல உடல் நலத்துடன் அவர் உள்ளார் என்று மறுப்பு தெரிவித்துள்ளது". ஏற்கனவே மூன்று முறை அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் பின்னர் இது வதந்தி என தெரிவிக்கப்பட்டது.