Varunlav: பல கோடிக்கு பேரம் பேசி... வருண் - லாவண்யா ரிசெப்ஷன் வீடியோவை வாங்கிய Netflix ! எவ்வளவு தெரியுமா?
நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமணம் முதல் வரவேற்பு வரை உள்ள வீடியோவை பல கோடிக்கு பேரம் பேசி, Netflix ஓடிடி பிளாட் ஃபாம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Varun Tej and Lavanya Tripathi
நயன்தாரா, ஹன்சிகா போன்ற பிரபலங்கள் தங்களின் திருமண வீடியோவை OTT நிறுவனங்களுக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்து கல்லாகட்டிய நிலையில், அதே ஃபார்முலாவை ஃபாலோ செய்து, திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை இந்த வழியில் மீண்டும் பெற்று வருகின்றனர் சில பிரபலங்கள்.
Varun Tej and Lavanya Tripathi
சில உச்ச நட்சத்திரங்களின் திருமணம் என்றதும், இது போன்ற ஓடிடி நிறுவனங்கள் தானாகவே முன் வந்து தங்களின் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில், பல கோடி கொடுத்து திருமண வீடியோவை வாங்கி கொள்ள முடிவு செய்கிறது. மேலும் தங்களுக்கு ஏற்றாப்போல் மண்டபம் பார்ப்பது முதல் அலங்காரம் வரை அனைத்தையும், ஓடிடி நிர்வாகமே செய்து விடுவதால், பெரிய அளவில் பிரபலங்களுக்கு பணம் மிச்சமாவதோடு, டென்ஷனும் குறைகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் ஓடிடியில் திருமணம் ஒளிபரப்பாக உள்ளது என்றால், அந்த திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் முதல் அனைவருக்குமே சில கட்டுப்பாடுகள் போடப்படுகிறது. அதாவது இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே போக கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இதன் காரணமாகவே வருண் - லாவண்யா திருமணம் மற்றும் ரிசப்ஷன் நடந்து முடிந்த பின்னரும் கூட இதுவரை குறிப்பிட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது NETFLIX நிறுவனம் எத்தனை கோடிக்கு, வருண் தேஜ் - லாவண்யா திருமணத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை, பெற்றுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் ரூ.8 கோடிக்கு வாங்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி திருமணம் நவம்பர் 1ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனியில் நடந்து முடித்து. இவர்களது திருமணத்தில் மெகா குடும்பத்துடன் நிதின், அல்லு அர்ஜுன் மற்றும் சில நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திருமண விழா தொடங்கி 3 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. கூடிய விரைவில் இவர்களின் திருமணம் மற்றும் ரிசப்ஷன் வீடியோவை NETFILX தளத்தில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.