- Home
- Gallery
- Ajithkumar: அஜித்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்... மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
Ajithkumar: அஜித்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்... மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
தல அஜித் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து.. இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கடைசியாக இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட்டு வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பின்னர், அஜித்துடன் இணைந்து நடிக்கிறார். இவரை தவிர ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்துக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Ajithkumar
அதாவது அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு, மார்ச் 15ஆம் தேதி முதல் அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதால், அஜித் வெளிநாடு செல்ல உள்ளார். இதற்கான வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளவே தற்போது அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.