விறுவிறுப்பாக நகரும் தளபதி 68 Shoot.. இடையில் தாய்லாந்திலும் நடக்கப்போகும் லியோ சக்சஸ் பார்ட்டி? உண்மையா?
Leo Success Party in Thailand : தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகி உலக அளவில் பிரமாண்டமாக ஓடிவரும் திரைப்படம் தான் லியோ. இந்நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.
Thalapathy vijay Thailand
இந்நிலையில் தனது லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அடுத்த நாளே தனது அடுத்த திரைப்பட பணிகளை தொடர்வதற்காக தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார் தளபதி விஜய் அவர்கள்.
Leo Movie Success
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், பிரபல நடிகர், நடிகைகள் பிரபுதேவா, பிரசாந்த், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படத்தில், தளபதி விஜய் நடித்து வருகிறார். இது அவருடைய 68வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy 68 pooja
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்றும், சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதும், பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
Beast Success Party
இந்நிலையில் பொதுவாக ஒரு திரைப்படம் முடிந்த பிறகு அந்த பட குழுவினரோடு இணைந்து பார்ட்டி ஒன்று கொண்டாடுவது விஜயின் வழக்கம். இந்நிலையில் லியோ வெற்றி விழா முடிந்த உடனேயே தளபதி விஜய் தாய்லாந்து சென்று விட்ட காரணத்தினால், தாய்லாந்தில் லியோ திரைப்பட குழுவை அழைத்து ஒரு பார்ட்டி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.