MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.4000 சம்பளம் முதல் ஹாலிவுட் ரேஞ்ச் படம் வரை.. கல்கி 2898 AD இயக்குனர் நாக் அஸ்வினின் திரைப் பயணம்..

ரூ.4000 சம்பளம் முதல் ஹாலிவுட் ரேஞ்ச் படம் வரை.. கல்கி 2898 AD இயக்குனர் நாக் அஸ்வினின் திரைப் பயணம்..

ஹாலிவுட் ரேஞ்சுக்கு தரமான பிரம்மாண்டமான படமாக கல்கி 2898 ஏடி படத்தை இயக்கிய நாக் அஸ்வன்.. தனது கேரியரை எப்படி, எங்கு தொடங்கினார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Ramya s
Published : Jun 28 2024, 10:37 AM IST| Updated : Jun 28 2024, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
Kalki 2898 AD

Kalki 2898 AD

திரை உலகில் தடம் பதிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஒருமுறை வெற்றி பெற்றாலும் அதை வெற்றியை தக்க வைப்பதும் மிகவும் முக்கியம். திரையுலகில் பல இயக்குனர் வெற்றி பெற்றாலும் தோல்வியே சந்திக்காத இயக்குனர்கள் சிலரே உள்ளணர். அந்த வகையில் பாகுபலி மூலம் ராஜமௌலி டோலிவுட்டுக்கு உலக அங்கீகாரத்தை கொண்டுவந்தார் என்றால், கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இந்திய படத்தை இயக்கி உள்ளார் நாக் அஸ்வின்.

213
nag ashwin

nag ashwin

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான கல்கி 2898 ஏடி நேற்று திரையரங்களில் வெளியானது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படம் பல சாதனைகளை முறியத்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த தயாராக உள்ளது. ஆனால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு தரமான பிரம்மாண்டமான படத்தை இயக்கிய நாக் அஸ்வன்.. தனது கேரியரை எப்படி, எங்கு தொடங்கினார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

313
Nag Ashwin, Kamalhaasan

Nag Ashwin, Kamalhaasan

சாதாரண மனிதர்களிடம் அசாதாரன திறமை இருக்கும். நாக் அஸ்வின் பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் கூறிய வார்த்தைகள் இவை. இப்படி, மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் இயக்குநர் 4000 சம்பளத்தில் இருந்து 600 கோடி படத்தை இயக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நாக் அஸ்வின்.. 

413
nag ashwin

nag ashwin

நாக் அஸ்வின் கல்லூரியில் படிக்கும் கல்லூரி இதழின் எடிட்டராக பணியாற்றினார்... தனது கல்லூரியில் மரம் வெட்டப்பட்டதை எதிர்த்து கட்டுரை எழுதியதால் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவரின் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள். பொதுவாக மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவ படிப்பையே தேர்வு செய்வார்கள். ஆனால் மல்டிமீடியா படிப்பை தேர்வு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். உதவி இயக்குனராக சேர்ந்து அடுத்த ஷாக் கொடுத்தார் நாக் அஸ்வின்.

513
nag ashwin

nag ashwin

சேகர் கம்முலாவின் உதவி இயக்குநராக சேர்ந்ததன் மூலம் நாக் அஸ்வனின் திரை வாழ்க்கை தொடங்கியது. ஆனால் அந்த படம் உருவாக கால தாமதமானதால் அதற்கு இடையில் மன்ச்சு மனோஜ் நடித்த நேனு மீக்கு தெலுசா என்ற படத்தில் அவர்  பணியாற்றினார். இந்த படத்திற்காக நாக் அஸ்வின் ரூ. 4,000 சம்பளம் வாங்கினார். பிறகு சேகர் கம்முலா இயக்க்ய லீடர், லைஃப் இஸ் பியூட்டிபுல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 

613
nag ashwin

nag ashwin

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்துக்குப் பிறகு களம் இறங்கிய நாக் அஸ்வன், விளம்பரப் படம், குறும்படம் என்று ஆகியவற்றை இயக்கினார். அதைப் பார்த்த தயாரிப்பாளர் அஷ்வினிதத்தின் மகள்கள் பிரியங்காவும், ஸ்வப்னாவும் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்தனர். இதற்கிடையில் எவடே சுப்ரமணியம் கதையை நாக் அஸ்வின் எழுதினார். இந்தப் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க விரும்பினார்.

713
Director Nag Ashwin

Director Nag Ashwin

ஆனால் ஸ்வப்னா, பிரியங்கா தங்கள் தந்தையின் வைஜெயந்தி மூவி மேக்கர்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்தனர்.. 2015-ம் ஆண்டு எவடே சுப்ரமணியம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நாக் அஸ்வின். நானி, மாள்விகா நாயர், விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 

813
nag ashwin and priyanka

nag ashwin and priyanka

இதனிடையே தோழியாக இருந்த பிரியங்கா காதலியாகி.. பிறகு மனைவியானார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நாக் அஸ்வின் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பாளர் சி. அஸ்வனி தத்தின் இளைய மகள் பிரியங்கா தத்தை மணந்தார். இந்த தம்பதிக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்

913
nag ashwin

nag ashwin

அடுத்ததாக 2018-ம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கிய படம் மகாநடி.. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சாவித்திரியின் மரியாதையை நாக் அஸ்வின் எந்த விதத்திலும் குறைத்து . சாவித்ரியின் பயோபிக் படமாக உருவான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்திருந்தார். சாவித்ரியின் வாழ்க்கையில் முக்கிய கதாபாத்திரங்கள் அதிகம்..அவற்றையெல்லாம் காட்டினால்..படம் 30 மணிநேரத்தை தாண்டும்.. அதனால்தான் அவரது மரியாதையை காக்கும் வகையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்...என்றார் நாக் அஸ்வின். மகாநடி படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

1013
nag ashwin

nag ashwin

இதை தொடர்ந்து 2024-ம் ஆண்டு வெளியான பிட்ட காதலு என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு பகுதியை நாக் அஸ்வின் இயக்கினார். மேலும் அதே ஆண்டு ஜாதி ரத்னலு என்ற படத்தை தயாரித்தன் மூலம் தயாரிப்பாளராக மாறினார்.

1113
nag ashwin

nag ashwin

நாக் அஸ்வின் அடுத்ததாக இயக்கி மற்றொரு படம் கல்கி 2898 ஏடி.. பிரபாஸை லீட் ரோலில் வைத்து இயக்கிய இந்த மாஸ்டர் பீஸுக்குப் பின்னால் பல வருடங்களாக ஹோம் வொர்க் செய்திருக்கிறார் இயக்குநர். கல்கியின் கதையை எழுத அவருக்கு 5 வருடங்கள் ஆனது. நாக் அஸ்வன் அறிவியலையும் புராணக் கூறுகளையும் இணைத்து ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார்.

1213
nag ashwin

nag ashwin

600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான கல்கி 2898 ஏடி படத்தை மிகவும் கவனமாக இயக்கினார் நாகஷ்வின். விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தன் வேலையைச் செய்தார்.இப்படத்தில் பிரபாஸுடன் அமிதாப், தீபிகா, கமல்ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்..

 

1313
kalki 2898 ad

kalki 2898 ad

தனது அசாத்திய மேக்கிங், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் என அசத்தி உள்ளார் நாக் அஸ்வின். அவரின் படைப்புக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் இந்திய சினிமா உலக சினிமாவை நோக்கி வேகமாக நகர்கிற்து என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved