பக்காவா ஒரு ஸ்பை திரில்லர்.. என்ன ஆனது ஜெயராம் ரவியின் "ஜன கன மன"? - இயக்குனர் அஹ்மத் கொடுத்த சுவாரசிய தகவல்!
அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது, அதிலும் குறிப்பாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
Arulmozhi Varman
தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமானவர்தான் ஜெயம் ரவி. அதன் பிறகு வெளியான பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக மாறியது.
லியோ படம் பார்த்துவிட்டு, விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்!
Ahmed
தமிழ் திரைஉலகில் கடந்த 20 ஆண்டுகளாக கதையின் நாயகனாக பயணித்து வரும் ஜெயம் ரவி அவர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல இயக்குனர் அகமத் அவர்களுடன் அவர் இணைந்த திரைப்படம் தான் ஜன கன மன.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு ஸ்பை திரில்லர் படமாக இது உருவாகிக் கொண்டு இருந்தது, ஆனால் பெருந்தொற்று காரணமாக முடங்கிய படங்களில் ஒரு திரைப்படமாக ஜன கன மன திரைப்படம் மாறியது. இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் அகமது, ரவியின் இறைவன் படத்தினுடைய வெற்றி நிச்சயம் ஜன கன மன திரைப்படத்தை எடுக்க எங்களை ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி ஏற்கனவே பிரதர் மற்றும் சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதனை தொடர்ந்து ஜன கன மன படத்தினுடைய படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.