அட்டகாசமான 5 வாரம்.. குடும்பத்தோடு செம என்ஜாய்மென்ட் - சென்னைக்கு குட் பை சொன்ன வனிதா அக்கா அனிதா விஜயகுமார்!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அருண் விஜயின் அக்கா அனிதா விஜயகுமார், தனது 5 வார சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் கத்தார் நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். சென்னையில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
Preetha Vijayakumar
தமிழ் திரையுலகில் சுமார் 328 படங்களில் நடித்து புகழ்பெற்ற முன்னணி நடிகர் தான் விஜயகுமார். அவருடைய இரண்டாவது மகளான டாக்டர் அனிதா விஜயகுமார், தனது கணவரோடு கத்தார் நாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் 5 வாரங்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட சென்னை வந்திருந்தார்.
Preetha Vijayakumar Family
விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், வனிதா விஜயகுமார் என்று தனது குடும்பமே நடிப்புத்துறையில் இருந்துவரும்போது, அனிதா மட்டும், நடிப்பு பக்கம் போகாமல், தற்போது மருத்துவராக செயல்பட்டு வருகின்றார்.
Arun Vijay
இந்நிலையில் தனது தங்கை, தம்பி மற்றும் தாய், தந்தையோடு தனது நேரத்தை கடந்த 5 வாரகாலமாக செலவிட்டு வந்த அனிதா, அண்மையில் தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினர். சென்னையில் அவர் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Anitha Vijayakumar
தற்போது தனது 5 வார விடுமுறை முடிந்துள்ள நிலையில், மீண்டும் அவர் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மருத்துவர் பணியை அவர் துவங்குவார். இந்த 5 வார காலம் தான் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.