முடி வெடிச்சு போய் இருக்கா? அதை வெட்டாம சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!
Home Remedies for Split Ends Hair : முடியின் முனையில் பிளவைப் போக்க உதவும் சில வீட்டு குறிப்புகள் இங்கே. அவை..
ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும், நல்ல நீளமாக வளர வேண்டுமானால் தினமும் கூந்தலை பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால் பல சமயங்களில் நாம் எவ்வளவுதான் பராமரித்தாலும், முடி வறட்சி அடர்த்தி குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்குக் காரணம் முடியின் முனையில் பிளவு இருப்பதால் தான்.
முடியின் முனையில் பிளவு ஏற்படுவதற்கு காரணம்: முடியின் முனையில் பிளவு ஏற்படுவதால் முடியின் வளர்ச்சி நின்றுவிடும் மற்றும் முடியும் மிகவும் வீக்கமடைந்து விடும். இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு அவற்றை ஒழுங்கமைக்க வேண்டும். ஆனால் ட்ரிம்மிங் மட்டுமே இதற்கு தீர்வு அல்ல. முடியின் பிளவு முனைகளில் இருந்து விடுபட வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சரி செய்யலாம். அவை..
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் பிளவுபட்ட முனைகளை சரி செய்ய உதவுகிறது. ஏனெனில், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உட்பட்ட பல இயற்கை பண்புகள் உள்ளது. இவை முடிக்கு ஈரப்பதம் அளிக்கிறது. எனவே, குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணெயால் முடியை நன்கு மசாஜ் செய்யவும். தேங்காய் எண்ணெய் பிளவுபட்ட முனைகளை நீக்கி, முடிக்கு பளபளப்பை கொடுக்கும்.
வெங்காய எண்ணெய்: இது அடி முடியில் ஏற்பட்ட பிளவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஈரப்பதமாக இருக்கும். மேலும் கூந்தலில் வறட்சி ஏற்படாது. இந்த எண்ணெயை நீங்கள் குளிப்பதற்கு முன் தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பிறகு குளிக்கவும். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Monsoon Hair Care Tips : மழைக்காலத்தில் கூந்தலை இப்படி கேர் பண்ணுங்க.. முடி உதிர்வே இருக்காது!
கற்றாழை ஜெல்: உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருக்க கற்றாழை ஜெல் உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை ஆழமாக ஹைட்ரேட் செய்கிறது. குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை தலைமுடியில் நன்கு தடவி பிறகு குளிக்கவும். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி வறண்டு போகாது.
இதையும் படிங்க: முடி உதிர்வை தடுக்க.. ஒரு வாரத்தில் தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்க வேண்டும் தெரியுமா?
வாழைப்பழ ஹேர் மாஸ்க்: இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்தல் மட்டும் வரட்சியை போக்கும் மற்றும் தலைமுடியை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். இந்த ஹேர் மாஸ்கை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், முடியின் முனையில் ஏற்பட்ட பிளவு பிரச்சனையிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D