பல கோடிகளில் சம்பளம்.. கனவிலும் நினைத்திராத ஆடம்பர வாழ்க்கை - இவங்க தான் கோலிவுட்டின் டாப் 10 Richest Actors!
Top 10 Richest Kollywood Actors 2023 : தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகர்களாக விளங்கிவரும் அனைவருக்கும் பல கோடி ரசிகர்கள் இருப்பது ஒருபுறம் என்றால், அவர்கள் வாங்குகின்ற சம்பளமும் பல கோடிகளில் உள்ளது நாம் அறிந்ததே. அந்த வகையில் தமிழ் சினிமாவின் டாப் 10 பணக்கார நடிகர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Vijay Sethupathi
பத்தாவது இடத்தில் இருக்கும் மாபெரும் நடிகர் தான் விஜய் சேதுபதி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், உண்மையிலேயே "மக்கள் செல்வன்" தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 1978 ஆம் ஆண்டு பிறந்த விஜய் சேதுபதிக்கு இப்போது வயது 45, அவருடைய சொத்து மதிப்பு சுமார் 70 கோடி என்று கூறப்படுகிறது.
Sivakarthikeyan
ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் இருந்து புறப்பட்டு இன்று வெள்ளித்திரையில் மாபெரும் ஆக்சன் நாயகனாக வளம்வருபவர் இவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்பொழுது 38 வயதாகும் தமிழ் சினிமாவின் மிகவும் இளமையான கதாநாயகனான இவருடைய சொத்து மதிப்பு சுமார் 118 கோடி என்று கூறப்படுகிறது.
Karthi
எட்டாவது இடத்தில் பிரபல நடிகர் சூர்யாவின் தம்பியும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் மாறியுள்ள நடிகர் கார்த்தி இருக்கிறார். தனக்கென சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தியின் வயது 45, அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 120 கோடி என்று கூறப்படுகிறது.
Vikram
ஏழாவது இடத்தில் பிரபல நடிகர் விக்ரம் இருக்கின்றார், தமிழ் சினிமா உலகில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை துவங்கி, இன்று ஒரு தனித்துவமான நடிகராக, சின்ன கமல்ஹாசனாக விளங்கிவரும் விக்ரமின் சொத்து மதிப்பு சுமார் 147 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
Suriya
ஆறாவது இடத்தில் பிரபல நடிகர் சூர்யா இருக்கின்றார். 47 வயதாகும் சூர்யா, தான் திரையுலகுக்கு வந்த புதிதில் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இன்று மாபெரும் வெற்றி திரைப்படங்களை கொடுக்கும் ஒரு சூப்பர் ஹிட் நாயகனாக மாறியுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 184 கோடி என்று கூறப்படுகிறது.
dhanush
ஐந்தாவது இடத்தில் உள்ள பிரபல நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் இரண்டாவது இளமையான நடிகராக திகழும் இவருடைய வயது 39. தனது சகோதரர் செல்வராகவன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர், இன்று தமிழ் திரை உலகை தாண்டி இந்திய திரை உலகின் நட்சத்திரமாக மாறி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 244 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
Ajithkumar
பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் தல அஜித், 51 வயதை எட்டி விட்டாலும் இன்றளவும் துடிப்பு குறையாத நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். தல அஜித் அவர்களுடைய சொத்து மதிப்பு சுமார் 294 கோடி என்று கூறப்படுகிறது.
Rajinikanth
மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்துவரும் ரஜினிகாந்த் அவர்கள். தமிழ் சினிமாவின் மிக மூத்த முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் வயது 72, இவருடைய சொத்து மதிப்பு சுமார் 367 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் தற்போது சுமார் 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கவிருக்கும் ஒரு மாபெரும் நடிகர் தான் தளபதி விஜய். இந்த பணக்கார நடிகர்களின் பட்டியல் இரண்டாம் இடத்தில் இருப்பதும் இவர்தான். 48 வயதாகவும் தளபதி விஜயின் சொத்து மதிப்பு சுமார் 550 கோடி என்று கூறப்படுகிறது.
Kamalhaasan
தமிழ் திரையுலக கலைஞர் என்றாலும், உலக சினிமாவே கண்டு வியந்து நிற்கும் ஒரு மாபெரும் கலைஞன் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவரை விட சினிமாவை ஒருவரால் அதிக அளவில் நேசிக்க முடியுமா என்று கேட்டால் அது சந்தேகமே?. அப்பேற்பட்ட இந்த மாபெரும் கலைஞனின் சொத்து மதிப்பு சுமார் 737 கோடி என்று கூறப்படுகிறது.