பிளாஷ்பேக் : பெரும் ரகளை... அடிதடியோடு நடந்த கல்யாணம் - தேவையானியை ராஜகுமாரன் கரம்பிடித்தது எப்படி?
குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி நடிகை தேவையானி, தன்னுடைய காதல் கணவர் ராஜகுமாரனை கரம்பிடித்தது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
devayani
ராஜகுமாரன் - தேவியானி ஜோடியின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்ததாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறி இருக்கிறார். தேவையானியின் அழகென்ன, அவரென்ன எப்படி ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டனர் என்கிற பேச்செல்லாம் இருந்ததாம். அதையெல்லாம் தாண்டி காதல் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.
ராஜகுமாரன், சூரியவம்சம் திரைப்படத்தில் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தேவையானிக்கு ராஜகுமாரன் தான் டயலாக்கெல்லாம் சொல்லி கொடுப்பாராம். நிமிந்து கூட பார்க்க மாட்டாராம். பொதுவாகவே நடிகைகளை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ராஜகுமாரன் தனித்து இருந்தது தேவையானிக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
Devayani, Rajakumaran Love story
மறுபக்கம் ராஜகுமாரனும் தேவையானியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். பின்னர் இயக்குனராக அறிமுகமாகி சரத்குமார் மற்றும் விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கிய சமயத்தில், பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடைபெற்று வந்ததாம். அப்போது சரத்குமார், விக்ரம் ஆகியோர் வெகுநேரமாக காத்திருந்தும் இயக்குனர் வரவில்லையாம்.
இதனால் இருவரும் டென்ஷனாகி அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று சென்று பார்த்தபோது, அவர் தேவையானியை வைத்து அவுட்டோரில் தனியாக காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தாராம். இதைப்பார்த்து டென்ஷனாகி இருவருக்கும் வாக்குவாதம் ஆகி, அடிதடி வரை சென்றுவிட்டதாம். பின்னர் தேவையானி சமாதானப்படுத்தினாராம்.
இதையும் படியுங்கள்... புரமோஷனுக்கு வர 3 லட்சம்; ஸ்டேஜ்ல யார் கூட உக்காரனும்னு வேற கண்டிஷன் - அபர்ணதியால் டென்ஷன் ஆன சுரேஷ் காமாட்சி
Devayani, Rajakumaran
ஒரு கட்டத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் கைவிடப்படும் நிலைக்கு சென்றுவிட்டதாம். பின்னர் சமாதானப்படுத்தி ஒரு வழியாக படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் ராஜகுமாரன். ஆனால் அப்படம் பிளாப் ஆகிவிட்டது. அந்த படத்தின் போது தான் தேவையானி - ராஜகுமாரன் காதல் விவகாரம் வெளியே தெரியவருகிறது. தேவையானி வீட்டில் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாம்.
Devayani husband Rajakumaran
நல்ல பீக்கில் இருக்கும் சமயத்தில் திருமணம் தேவையா, அதுவும் ஒரு படம் எடுத்த இயக்குனரோடு, என்று குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு நாள் இரவில் தி நகரில் உள்ள தனது வீட்டில் கேட் ஏறி குதித்து குடும்பத்தினருக்கு தெரியாமல் திருத்தணிக்கு சென்று, அங்கு ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டாராம் தேவையானி. இவர்கள் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது வேறுயாருமில்லை தற்போது மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய சிங்கமுத்து தான்.
Devayani, Rajakumaran marriage
தேவையானியின் அம்மா அடிக்க ஆளெல்லாம் செட் பண்ணினாராம். ஆனால் தேவையானியும், ராஜகுமாரனும் திருமணம் முடிந்த கையோடு இயக்குனர் விக்ரமனின் வீட்டில் தஞ்சமடைந்தார்களாம். பின்னர் விக்ரமன் தான் தேவையானியின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார். பின்னர் தன் வீட்டின் அருகேயே ஒரு வீட்டை பிடித்து அங்கு அவர்களை தங்க வைத்திருக்கிறார் விக்ரமன். அதன் பின்னர் குடும்பம் நடத்தி இன்று அழகான இரண்டு பெண் குழந்தைகளோடு ஹாப்பியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தேவையானி என செய்யாறு பாலு கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ‘இந்தியன் 2’ 400 கோடி வசூல்.. நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்- போஸ்டர் ஒட்டி கமல் ரசிகர்கள் போட்ட புது கணக்கு