- Home
- Gallery
- புரமோஷனுக்கு வர 3 லட்சம்; ஸ்டேஜ்ல யார் கூட உக்காரனும்னு வேற கண்டிஷன் - அபர்ணதியால் டென்ஷன் ஆன சுரேஷ் காமாட்சி
புரமோஷனுக்கு வர 3 லட்சம்; ஸ்டேஜ்ல யார் கூட உக்காரனும்னு வேற கண்டிஷன் - அபர்ணதியால் டென்ஷன் ஆன சுரேஷ் காமாட்சி
நாற்கரப்போர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வர ரூ.3 லட்சம் கேட்ட நடிகை அபர்ணதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சரமாரியாக விமர்சித்துள்ளார்.

suresh kamatchi, Abarnathy
அறிமுக இயக்குனர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் நாற்கரப்போர். இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீவெற்றி, ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் அபர்ணதி ஜோடியாக லிங்கேஷ் நடித்துள்ளார். இதில் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் அபர்ணதி.
நாற்கரப்போர் படத்தின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் நாயகி அபர்ணதி மட்டும் பங்கேற்கவில்லை. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகை அபர்ணதியை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணத்தையும் கூறினார்.
Abarnathy
அவர் பேசியதாவது : “நடிகைகள் புரமோஷனுக்கு வர மாட்டேன்னு சொல்றது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு ஆகிவிட்டது. புரமோஷனுக்கு வருமாறு தயாரிப்பாளர் போன் பண்ணி கூப்பிட்டிருக்கிறார். அவங்க, நான் வரமாட்டேன், எனக்கு புரமோஷனுக்கு தனியா காசு கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார். நானும் அபர்ணதியிடம் பேசினேன். வர முடியாதுனு சொன்னாங்க. அதுமட்டுமின்றி ரெண்டு, மூணு கண்டிஷன் வச்சாங்க.
இதையும் படியுங்கள்... ‘இந்தியன் 2’ 400 கோடி வசூல்.. நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்- போஸ்டர் ஒட்டி கமல் ரசிகர்கள் போட்ட புது கணக்கு
Abarnathy skip Narkarapor movie trailer launch
நான் ஸ்டேஜ்ல யாரோட உட்காரணும் அப்படிங்கிற வரைக்கும் கண்டிஷன் போட்டாங்க. எனக்கு சமமானவர்கள் தான் உட்கார வேண்டும்னு சொன்னார். எனக்கு பயங்கர் கோபமாகிடுச்சு. பின்னர் நடிகர் சங்கத்துல புகார் கொடுங்கனு சொன்னேன். அதற்கு அவர் நான் நடிகர் சங்கத்துலயே இல்லைனு சொல்லிவிட்டார். இறுதியாக வருவீர்களா? மாட்டீர்களா என கேட்டேன். 3 லட்சம் கொடுத்தால் வருவேன். இல்லேனா வரமாட்டேன்னு சொல்லிவிட்டார்.
Suresh Kamatchi slams abarnathy
நீங்க வரவே வேண்டாம்னு சொல்லி போனை கட் பண்ணிவிட்டேன். பின்னர் இரண்டு நாள் கழித்து போன் பண்ணி சாரி சார் தெரியாம பேசிட்டேன்னு சொன்னார். அந்த பங்க்ஷனுக்கு வரேனும் சொன்னார். ஆனால் தற்போது போன் போட்டால் வெளியூரில் இருப்பதாக கூறிவிட்டார். அவர் வெளியூரிலேயே இருக்கட்டும். இதுமாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை. மற்ற தயாரிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த விஷயத்தை சொல்கிறேன்.
நடிகை அபர்ணதி, வசந்த பாலன் இயக்கிய ஜெயில் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த தேன், இறுகப்பற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஒரு படம் ஹிட் ஆனதும் நடிகை அபர்ணதி செய்யும் இந்த அட்ராசிட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவரை சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிசினஸில் படு பிசியாக இருக்கும் நயன்தாரா... கணவருடன் சேர்ந்து இத்தனை தொழில்கள் செய்கிறாரா? முழு லிஸ்ட் இதோ