விஜய் மேல் அம்புட்டு கோபமா?... லியோ போஸ்டரில் கை வைத்த கலாநிதி மாறன் - கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்
சன் டிவி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தளபதி விஜய்யின் லியோ பட போஸ்டரை பார்த்து கடுப்பான ரசிகர்கள் கலாநிதி மாறனை சாடி வருகின்றனர்.
kalanithi maran, vijay
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
Leo Movie New Poster
அந்த வகையில், நேற்று திடீர் சர்ப்ரைஸாக லியோ பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் செம்ம கடுப்பாகி உள்ளனர். இதற்கு காரணம் சன் டிவி தான். லியோ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி தான் வாங்கி உள்ளது. அந்நிறுவனம் தான் இந்த சர்ப்ரைஸ் போஸ்டரை நேற்று மாலை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது. அதில் வருகிற அக்டோபர் 5-ந் தேதி லியோ பட டிரைலர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay
விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரை பார்த்து கடுப்பானதற்கு காரணம், அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யின் புகைப்படமே இடம்பெறாததால் தான். அதில் லியோ பட வில்லனான சஞ்சய் தத்தின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்தது. இதைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் விஜய்யின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே கலாநிதி மாறன் இப்படி செய்துள்ளதாக சாடி வருகின்றனர். சிலரோ சஞ்சய் தத் தான் ஹீரோவா என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
kalanithi maran
ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிலேயே நடிகர் ரஜினியை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக விஜய்யை சீண்டும் விதமாக சில கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பிய கலாநிதி மாறன், தற்போது லியோ பட போஸ்டரிலும் கை வைத்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் பட தோல்விக்கு பின் விஜய் சன் பிக்சர்ஸுக்கு கால்ஷீட் கொடுக்காத கோபத்தினால் தான் கலாநிதி மாறன் இப்படி செய்து வருவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் ஆண்டனியின் ரத்தம் முதல் திரிஷாவின் ரோட் வரை! இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் அரை டஜன் படங்களின் லிஸ்ட்