- Home
- Gallery
- ரூ.1800 கோடி சொத்து.. சிங்கப்பூரில் பல ஹோட்டல்கள்.. பவன் கல்யாணின் ரஷ்ய மனைவி பற்றி தெரியுமா?
ரூ.1800 கோடி சொத்து.. சிங்கப்பூரில் பல ஹோட்டல்கள்.. பவன் கல்யாணின் ரஷ்ய மனைவி பற்றி தெரியுமா?
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணி மனைவி அன்னா லெஷ்னேவா பற்றியும், அவரின் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Pawan Kalyan
தான் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் ஒருவழியாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். பவன் கல்யாண் மட்டும், தனது முதல் தேர்தல் வெற்றியை பெறவில்லை, ஆனால் அவரின் கட்சியான, ஜனசேனா கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் வலிமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது.
Pawan Kalyan wife Anna Lezhneva
பவன் கல்யாணின் அரசியல் பயணம் முழுவதும், அவரின் மனைவி அன்னா லெஷ்னேவா அவருக்கு அசைக்க முடியாத ஆதரவை கொடுத்து வருகிறார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் ஜனசேனா கட்சியின் தளத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு திரும்பியபோது, அவர் ஆரத்தி செய்து, நெற்றியில் திலகமிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலானது.
Pawan Kalyan wife Anna Lezhneva
மேலும் பவன் கல்யாண் தனது வீட்டின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற குனிந்தபோது, தனது கணவரின் செருப்புகளை எடுப்பது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலானது. ரஷ்யாவை சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட அன்னா லெஷ்னேவாவுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்தது.
Anna Lezhneva
யார் இந்த அன்னா லெஸ்னேவா?
1980 இல் பிறந்த அன்னா லெஷ்னேவா ஒரு ரஷ்ய மாடல் நடிகை. அவர் 2011 இல் டீன் மார் படத்தின் படப்பிடிப்பின் போது பவன் கல்யாணை சந்தித்தார், அதில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர, இந்த ஜோடி 2 ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். பின்னர் கடந்த 2013-ம் செப்டம்பர் 30-ம் தேதி, பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டார் அன்னா. அவர் பவனின் 3-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
Pawan Kalyan wife Anna Lezhneva
இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தங்கள் திருமணத்திற்குப் பிறகு, பவன் கல்யாண் அன்னா லெஷ்னேவாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளையும் தத்தெடுத்து, தனது மற்ற மூன்று குழந்தைகளுடன் வளர்த்தார். 2017 ஆம் ஆண்டில், இந்த தம்பதியி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றனர், அவருக்கு மார்க் ஷங்கர் பவானோவிச் என்று பெயரிட்டனர்.
Pawan Kalyan wife Anna Lezhneva
இந்த நிலையில் அன்னா லெஷ்னேவாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகி உள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு சிங்கப்பூரில் பல ஹோட்டல்கள் சொந்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Pawan Kalyan personal life
பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை
பவன் கல்யாண் முதன்முதலில் 1997 இல் நந்தினி என்ற பெண்ணை மணந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த திருமண வாழ்க்கை நீடித்தது. பின்னர் இந்த ஜோடி பிரிந்துவிட்டனர். பின்னர் பவன் கல்யாண் நடிகை ரேணு தேசாய் 2009 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த தம்பதிக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த ஜோடி 2012 இல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
Pawan Kalyan wife Anna Lezhneva
இதனிடையே அன்னா லெஷ்னேவா பவன் கல்யாண் இருவரும் பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவியது. இருப்பினும் சமீபத்திய தேர்தல் வெற்றியின் போது அன்னா பவன் கல்யாணுக்கு முழு ஆதரவையும் வழங்கினார். அவர் தனது கணவரின் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பவன் கல்யாணின் சமீபத்திய தேர்தல் வெற்றியின் போது பாரம்பரிய சடங்குகளை செய்ததுடன், ரசிகர்களை வாழ்த்தி பிரிவினை வதந்திகளை முறியடித்துள்ளார்.