- Home
- Gallery
- கேஜிஎப் படத்தில் யாஷுக்கு முன் ராக்கி பாய் ஆக நடிக்க இருந்தது இந்த பாலிவுட் பிரபலமா? நல்ல வேள அவர் நடிக்கல!
கேஜிஎப் படத்தில் யாஷுக்கு முன் ராக்கி பாய் ஆக நடிக்க இருந்தது இந்த பாலிவுட் பிரபலமா? நல்ல வேள அவர் நடிக்கல!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற கேஜிஎப் திரைப்படத்தில் முதலில் ராக்கி பாய் ஆக நடிக்க இருந்தது பாலிவுட் நடிகர் தானாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
KGF yash
கன்னட திரையுலகம் என்றாலே பிறமொழி படங்களை ரீமேக் செய்வார்கள் என்கிற பிம்பம் இருந்த நிலையில், அதையெல்லாம் தகர்த்தெறிந்து தங்களிடமும் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் இருக்கிறது என்பதை உலகறிய செய்த திரைப்படம் தான் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் யாஷ். இப்படத்தின் முதல் பாகம் 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
Rocky Bhai Yash
முதல் பாகத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை செம்ம மாஸாக எடுத்து பான் இந்தியாவையே அதிரவிட்டார் பிரசாந்த் நீல். கேஜிஎப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது. இப்படி இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால் அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
இதையும் படியுங்கள்... ரன் முதல் நான் கடவுள் வரை; ஸ்ரீகாந்த் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனயா! ஷாக்கிங் லிஸ்ட் இதோ
KGF hero Yash
கேஜிஎப் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த யாஷ், தற்போது டாக்சிக் என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். கேஜிஎப் படம் யாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் ராக்கி பாய் கேரக்டரை அவரை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு செம்ம மாஸாக நடித்து இருந்தார். ஆனால் முதலில் இயக்குனர் பிரசாந்த் நீல், ராக்கி பாயாக யாஷை நடிக்க வைக்கும் ஐடியாவில் இல்லையாம்.
Yash, Hrithik Roshan
கேஜிஎப் கதையே பிரம்மாண்டமானது என்பதால் அப்படத்தை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து தான் எடுக்கும் ஐடியாவில் இருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் அவரை அணுக முடியாத காரணத்தால் அக்கதையை யாஷுக்கு சொல்லி அவரை நடிக்க வைத்தாராம். ஒருவேளை ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தால் கேஜிஎப் இந்த அளவுக்கு ஹிட்டாகி இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதையெல்லாம் பார்க்கும் போது நல்ல வேளை அவரை நடிக்க வைக்கல என்று தான் சொல்ல தோன்றுகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஹீரோ! 'அன்பே வா' டெல்னா நடிக்கும் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு!