Sam Anton : ஜி.வி பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் லோகேஷின் நண்பர்.. இரு மொழிகளில் உருவாகும் படம் - யார் அது?
Director Sam Anton : சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி அதன் பிறகு வெள்ளித்திரையில், நடிகர் ஜி.வி. பிரகாஷின் டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சாம் அன்டன்.
Darling
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கலில் பணியாற்றி அதன் பிறகு ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "டார்லிங்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் தான் சாம் அன்டன். இவர் இயக்கத்தில் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
Enaku Innoru peru iruku
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு", அதர்வாவின் "100" மற்றும் "ட்ரிகர்" அதேபோல யோகி பாபுவின் "கூர்கா" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியது சாம் அன்டன் தான். அதேபோல கூர்கா திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரித்தும் வழங்கியிருந்தார் சாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Lokesh
இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய முதல் திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சாம் அன்டன் இயக்கஉள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இது திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.