MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இமான் முதல் ஆதிக் வரை... விவாகரத்தான பெண்களை கரம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியல் இதோ

இமான் முதல் ஆதிக் வரை... விவாகரத்தான பெண்களை கரம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியல் இதோ

தமிழ் சினிமாவில் விவாகரத்தானவர்களை திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2023, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவில் மார்க் ஆண்டனி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆதிக்கிற்கு இது முதல் திருமணமாக இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். அவர் ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

25

ரெடின் கிங்ஸ்லி

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். 46 வயதாகும் ரெடினுக்கு இது முதல் திருமணம் தான். ஆனால் சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு கிரிஷ் என்பவருடன் திருமணம் ஆனதோடு, இந்த ஜோடிக்கு ஷிவ்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

35

ஜான் கொக்கேன்

பிரபல வில்லன் நடிகரான ஜான் கொக்கேன் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். நடிகை பூஜா கடந்த 2010-ம் ஆண்டு கேரிக் என்கிற தொகுப்பாளரை திருமணம் செய்துகொண்டு 7 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45

டி இமான்

இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய முதல் மனைவியான மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து எமிலி என்பவரை கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இமானின் இரண்டாவது மனைவி எமிலி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார்.

55

ரவீந்தர் சந்திரசேகர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதல் திருமணம் செய்துகொண்டார். நடிகை மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில், அவர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... ஷண்முகத்தால் சக்ஸஸ் ஆன வைகுண்டத்தின் பிளான்.. பரணி எடுத்த முடிவு என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெடின் கிங்ஸ்லி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved