MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆயுத பூஜை லீவுக்கு ஊருக்குப் போறீங்களா? அப்படினா உங்க ஊருக்கு போகும் பேருந்து எங்கு நிற்கும் தெரியுமா?

ஆயுத பூஜை லீவுக்கு ஊருக்குப் போறீங்களா? அப்படினா உங்க ஊருக்கு போகும் பேருந்து எங்கு நிற்கும் தெரியுமா?

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 14 2023, 06:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, விஜயதஷமி  தொடர் விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக சென்னையிலிருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும் பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய முக்கிய தொழில் நகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25

அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற சில தடப்பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிறுத்தம் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்து  இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

35

*  கோயம்பேடு பேருந்து நிலையம்:

(புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR)மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி,ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.  

45

*  தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி  மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

55

* பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி,  திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved