அயோத்தி ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமரின் முழு சிலை.. போட்டோ இதோ..
வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோயிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டது. '
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் நாட்டின் பிற முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வு இந்தியா முழுவதும் பல நகரங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.. கும்பாபிஷேகம் முடிந்ததும், ஜனவரி 24-ம் தேதி முதல் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 16-ம் தேதி முதல் 7 நாள் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டது. '
வெள்ளை மற்றும் மஞ்சள் துணையால் இந்த சிலை மூடப்பட்ட இந்த ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் கோயில் கருவறையில் வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி செதுக்கிய ராம் லல்லாவின் சிலை ராமர் கோயிலில் நிறுவத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோவிலில் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சினிமா,பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், துறவிகள் என 7000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
இந்த நிலையில் ராமரின் உடல் மற்றும் முகம் கட்டப்படாத நிலையில் முழு உருவ சிலையில் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.