- Home
- Gallery
- சிறந்த தந்தை நீ.. உன்னை தினந்தோறும் கொண்டாடுகிறோம்- அன்சீன் போட்டோஸ் பதிவிட்டு அன்பை பொழிந்த அருண் விஜய் மனைவி
சிறந்த தந்தை நீ.. உன்னை தினந்தோறும் கொண்டாடுகிறோம்- அன்சீன் போட்டோஸ் பதிவிட்டு அன்பை பொழிந்த அருண் விஜய் மனைவி
அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி, தனது கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தன் அன்பை பொழிந்திருக்கிறார்.

arun vijay Daughter
நடிகர் அருண் விஜய் தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார். 25 ஆண்டுகளுக்கு மேல் அவர் சினிமாவில் நடித்து வந்தாலும், அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அஜித்தின் என்னை அறிந்தால் தான். அப்படத்தில் வில்லனாக நடித்த பின்னர் அருண் விஜய்யின் சினிமா கெரியர் தலைகீழாக மாறியது.
arun vijay son and daughter
அதன்பின்னர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்த அருண் விஜய், பின்னர் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடம் திரைப்படம் ஹீரோவாக அருண் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பின்னர் குற்றம் 23, மாஃபியா என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார் அருண் விஜய்.
arun vijay family
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக யானை திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஹரி இயக்கத்தில் கமர்ஷியல் ஹீரோவாக மாஸ் காட்டி இருந்தார் அருண் விஜய். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. யானை படத்தின் வெற்றிக்கு பின்னர் அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் தொடர் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... சைக்கோ கில்லராக நடிக்கிறாரா ஆர்.ஜே.பாலாஜி..! பயங்கரமான போஸ்டருடன் அடுத்த படத்தை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
arun vijay wife aarathi
தற்போது அவர் நடிப்பில் இரண்டு மாஸ் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று வணங்கான். சூர்யா நடித்து கைவிடப்பட்ட இப்படத்தை தற்போது அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் பாலா. வணங்கான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
arun vijay family trip
இதுதவிர ரெட்ட தல என்கிற படத்திலும் நடித்து வருகிறார் அருண் விஜய். திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
arun vijay
இந்த நிலையில், அருண் விஜய் தன்னுடைய குடும்பத்தினரோடு அண்மையில் பாரிஸுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி, உலகின் சிறந்த தந்தை நீ என்றும் உன்னை தினந்தோறும் நாங்கள் கொண்டாடுவோம் எனவும் கேப்ஷன் போட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கடல் தாண்டிச் சென்று... லண்டனில் ஜாம் ஜாம்னு மகளின் ரிஷப்ஷனை நடத்திய அனிதா விஜயகுமார் - போட்டோஸ் இதோ