- Home
- Gallery
- Diya : இவங்க டாக்டரா இல்ல ஆக்டரா? போட்டோஷூட்டில் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் பேத்தி தியா
Diya : இவங்க டாக்டரா இல்ல ஆக்டரா? போட்டோஷூட்டில் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் பேத்தி தியா
நடிகர் விஜய்குமாரின் மகள் அனிதாவின் வாரிசான தியா, சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக நடத்தியுள்ள கார்ஜியஸ் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Diya
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் சினிமா பக்கமே தலைகாட்டாத ஒருவர் என்றால் அது அனிதா தான். விஜயகுமார் - முத்துக்கண்ணு ஜோடிக்கு இரண்டாவது மகளாக பிறந்த அனிதாவுக்கும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது.
Diya Gokul
குறிப்பாக பாரதிராஜா தன்னுடைய கருத்தம்மா திரைப்படத்தில் அனிதாவை நடிக்க வைக்க கெஞ்சி கேட்டு பார்த்தாராம். ஆனால் அவரது தாயார் நோ சொல்லிவிட்டார். இதனால் எம்பிபிஎஸ் படித்து டாக்டராகிவிட்டார் அனிதா.
Vijayakumar Grand Daughter Diya
அனிதா விஜயகுமார் தன்னுடன் படித்த கோகுல் என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவம் படித்து முடித்து டாக்டராக பணியாற்றி வருகின்றனர்.
Anitha Vijayakumar Daughter Diya
அனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஜெய் சென்னையிலும், மகள் தியா லண்டனிலும் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இதில் அனிதாவின் மகள் தியாவிற்கு அண்மையில் திருமணம் ஆனது.
இதையும் படியுங்கள்... ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய ரன்வீர் சிங்.. தீபிகாவை முந்திய ஆலியா.. பிரபலங்களின் பிராண்ட் மதிப்பு இவ்வளவா?
Diya photoshoot
தியா தன்னுடைய நீண்ட நாள் காதலனாக தில்லான் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் கரம்பிடித்தார். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Diya Latest Photos
திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய கணவருடன் லண்டன் சென்றுவிட்ட தியாவுக்கு, அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அருண் விஜய், விஜயகுமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Diya Gorgeous Photos
தியா டாக்டராக இருந்தாலும் சினிமா ஹீரோயின்கள் போல் அவ்வப்போது போட்டோஷூட்டும் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ரோஸ் நிற மாடர்ன் உடையில் அழகு தேவதையாக போஸ் கொடுத்தபடி தியா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீங்க டாக்டரா இல்ல ஆக்டரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Ajithkumar Playing cricket : மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்குமார்... ஆத்விக் பவுலிங்கில் அவுட் ஆன ஏகே