உப்புக்கடலை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
Roasted Chana Benefits : வருத்த சுண்டலை எப்போது யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எனவே, இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வறுத்த சுண்டல் குளிர்காலத்தில் சூப்பர் ஃபுட்களில் ஒன்றாகும். இதில் இருக்கும் இரண்டு சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் தேவை. புரதம் செல்களை உருவாக்குவதோடு அவற்றை சரி செய்யும் செயல்படுகிறது.
அதே நேரத்தில், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து அவசியம். இது தவிர, இதில் இருக்கும் வெப்பத்தன்மையால், குளிர்காலத்தில் இதை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்போது இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது : வறுத்த சுண்டலில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வாங்கி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் விலகும்.
இரத்த சோகையை நீக்கும் : இரத்த சோகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு வருத்த சுண்டல் ரொம்பவே நல்லது. ஏனெனில், இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க செய்து, இரத்த சோகையை நீக்கும்.
எலும்புகள் வலுவடையும் : பால், தயிர் போன்றவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது போலவே, வறுத்த சுண்டலையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் : உடலில் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதயம் தொடர்பான நோய்களை உண்டாக்கும். இதற்கு வறுத்த சுண்டலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது : வறுத்த சுண்டல் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: உங்க வீட்ல கொண்டக்கடலை இருக்கா?! உடனே இப்படி தோசை செய்ங்க.. எக்கச்சக்க சத்துக்கள் இருக்கு!
எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் : வறுத்து சுண்டல் புரதத்தின் மூலமாகவும். புரதச்சத்து நிறைந்த இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இதனால் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடையை எளிதாக குறைக்கலாம்.
இதையும் படிங்க: கோழி குழம்பு சுவையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு... இப்படி செஞ்சு அசத்துங்க!
முதுகு வலியில் இருந்து நிவாரணம் : பலவீனம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி முதுகு வலி ஏற்படும். எனவே, இத்தகைய பெண்கள் தினமும் இரண்டு கைப்பிடி அளவு வறுத்த சுண்டலை சாப்பிட்டு வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.