- Home
- Gallery
- Actress Nila: 40 வயதில் திருமணத்திற்கு தயாரான பிரபல தமிழ் பட ஹீரோயின்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
Actress Nila: 40 வயதில் திருமணத்திற்கு தயாரான பிரபல தமிழ் பட ஹீரோயின்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
தமிழில் 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான, நடிகையும் பிரியங்கா சோப்ராவின் உறவினருமான, மீரா சோப்ரா (நிலா) தன்னுடைய 40 வயதில் திருமணம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த, 'அன்பே ஆருயிரே' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நிலா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான மீரா சோப்ரா.
இந்த படத்தை தொடர்ந்து, பிரசாந்துக்கு ஜோடியாக ஜாம்பவான், சிபிராஜ்க்கு ஜோடியாக லீ, அர்ஜுனுக்கு ஜோடியாக மருதமலை, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 'கில்லாடி' படத்தில் நடித்திருந்தார்.
பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய தந்தையின் பிசினஸை கவனித்து வந்த நிலா, அவ்வபோது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் ஹிந்தியில் 'சாஃபட்' என்கிறார் திரைப்படம் வெளியானது. திரைப்படத்தை தாண்டி சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் நடிகை நிலா, தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இவருடைய திருமணம், வரும் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தற்போது பரபரப்பாக நடந்து வருவதாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் நடிகை நிலாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவரை திருமணம் செய்து கொள்ளும் நபர் பற்றிய தகவல் வெளியாகவில்லை.