Vikram: 'தங்கலான்' படத்தின் அர்த்தம் இது தான்! கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை உடைத்து கூறிய விக்ரம்..!
'தங்கலான்' படம் குறித்து நடிகர் விக்ரம் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
thangalaan
இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் முதல் முறையாக கைகோர்த்துள்ள 'தங்கலான்' திரைப்படம், கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ளது. ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும்
Thangalaan release date announced
ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தை, இயக்குனர் பா. ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் பேனரில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி, நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம் இப்படம் குறித்து தகவலையும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார். விக்ரம் படம் பற்றி கூறுகையில், 'தங்கலான்' ஒரு உணர்வுபூர்வமான ரா படம். 'தங்கலான்ன்' என்பதன் அர்த்தம், தனி இல்லை. இது ஒரு பழங்குடிப் பெயர். மேலும் இப்படத்தில் வழக்கமான பாடல்கள், சண்டைக்காட்சிகள்.. சினிமாத்தனமான கிளாமர் போன்றவை இருக்காது.
Chiyaan Vikram starrer new film Thangalaan update out
என்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக வசனங்கள் இல்லை. லைவ் சவுண்டிங்கில் படம் பண்ணினோம். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மேக்கப் போடா மூன்று மணி நேரம் ஆனது. பா.ரஞ்சித் தொடர்ந்து அர்த்தமுள்ள திரைப்படங்களை உருவாக்குகிறார். 'தங்கலான்' மூலம் பார்வையாளர்களை ஒரு புதிய உலகிற்குள் நுழைய வைப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது.
என்னுடைய ‘9 மாதங்கள்’ படத்துக்கு சுரேந்தர் ரெட்டியும், வினயும் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். தற்போது சுரேந்தர் ரெட்டி இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இது ஒரு வாழ்க்கை வட்டம் போல் தெரிகிறது," என்றார். விக்ரம்காரியுடன் இது எனக்கு முதல் படம். அவருடைய அர்ப்பணிப்பும் நேரமும் வியக்க வைத்தது. ‘தங்கலான்’ படம் ரசிகர்களை பிரமிக்கவைக்கும்’’ இந்த தகவல்கள் படம் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.