இதயத்தில் ஒற்றை ரோஜா.. ரெட் ஹாட் நாயகியாக மாறிய சானியா ஐயப்பன் - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
Actress Saniya Iyappan : கடந்த 2002 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து இன்று தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழி படங்களிலும் நாயகியாக நடித்து வரும் நடிகை தான் சானியா ஐயப்பன்.

Actress Saniya
மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக ஓரிரு படங்களில் நடித்து வந்த சானியா ஐயப்பன், "மழவில் மனோரமா" என்கின்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று ரன்னர் அப் போட்டியாளராக வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது.
Saniya
அதிலும் குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான "குயின்" என்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. அறிமுக நடிகை என்கின்ற விருதும் இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Actress Saniya Iyappan
மோகன்லால் நடிப்பில் வெளியான "லூசிபர்" மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான "தி பிரீஸ்ட்" உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "இறுக்கப்பற்று" என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
சானியா ஐயப்பன் தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவர் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.