- Home
- Gallery
- Thalapathy 66: விஜய்க்கு அண்ணனாக நடிக்க முடியாது? மோகன் குட்பை சொன்னதால்? ஸ்மார்ட் ஹீரோவை களமிறங்கிய படக்குழு
Thalapathy 66: விஜய்க்கு அண்ணனாக நடிக்க முடியாது? மோகன் குட்பை சொன்னதால்? ஸ்மார்ட் ஹீரோவை களமிறங்கிய படக்குழு
Thalapathy 66 update: விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில், நடிகர் மோகன் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஸ்மார்ட் ஹீரோ ஒருவர் அண்ணன் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
Thalapathy Vijay
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
Thalapathy Vijay
தளபதி 66 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இந்த படத்தில் சரத்குமார் விஜய் தந்தையாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் பரவி வந்தது. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Thalapathy Vijay 66
கதைப்படி, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அண்ணனாக 80ஸ் களின் பேவரைட் நடிகர் மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணன், அப்பா போன்ற ரோல்களில் மோகனுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று தெரிகிறது. எனவே அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
Shaam
இதையடுத்து, படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், 90ஸ் பிரபல ஹீரோவாகவும், பல இளம் பெண்களின் ட்ரீம் பாயாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ஷ்யாம் இப்படத்தில்அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Shaam
விஜய்க்கு இதில் இரு அண்ணன்கள் எனக் கூறப்படுவதால் அதில் ஒருவராக ஷ்யாம் நடிப்பார் என்றும், மற்றொரு அண்ணன் ரோலில் நடிக்க தெலுங்கில் பிரபலமான ஹீரோவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
shaam
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’ படத்தில் விஜய்க்கு நண்பராக, தமிழ் திரையுலகில் அறிமுகமான ஷ்யாம் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
vijay66
இவர், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2020 ஆண்டு வெளியான நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தில் நடித்திருந்தார், இருப்பினும் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.