உனக்கு கல்யாணம் ஆனாலும்!நான் கூப்பிடும் போது வந்து என்னுடன் உல்லாசமாக இருக்கணும்! கதறியும் விடாத காமக்கொடூரன்
திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த நபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தாயுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாயமான இளம்பெண் திடீரென வீடு திரும்பினார். இதனையடுத்து, அந்த பெண்ணியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்;- இளம்பெண், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதே பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரான மணிகண்டனை காதலித்துள்ளார்.
அப்போது ஆசை வார்த்தை கூறிய மணிகண்டன் பலமுறை இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததோடு அதனை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். இதனிடையே, சில காரணங்களுக்காக திடீரென அந்த இளம்பெண் மணிகண்டன் உடனான காதலை முறித்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் தாயார் திருமண ஏற்பாடுகளை செய்வதை அறிந்த மணிகண்டன் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி வந்துள்ளார். எவ்வளவு கெஞ்சியும் விடாமல் கடைசியாக என்னுடன் உல்லாசமாக இருந்தால் வீடியோ மற்றும் புகைப்படத்தை அழித்துவிடுவதாக கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அந்த இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி கொடநாடு பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று இரண்டு நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது உல்லாச வீடியோவை அழித்து விடும்படி அந்த இளம்பெண் கெஞ்சியுள்ளார். ஆனால், அழிக்க மறுத்த மணிகண்டன், திருமணம் நடந்தாலும், தான் கூப்பிடும் போதெல்லாம் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும். யாரிடமாவது கூறினால் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி விட்டு மீண்டும் நம்பியூர் அழைத்து வந்துவிட்டுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனை பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.