- Home
- குற்றம்
- சென்டிமென்டாக பேசி இரண்டு குழந்தைகளின் தாயை மடக்கிய மருதுபாண்டி! உல்லாச வீடியோவை கணவனுக்கு அனுப்பிய கொடூரன்
சென்டிமென்டாக பேசி இரண்டு குழந்தைகளின் தாயை மடக்கிய மருதுபாண்டி! உல்லாச வீடியோவை கணவனுக்கு அனுப்பிய கொடூரன்
ரீல்ஸ் வீடியோ போடுவதால் கணவரை பிரிந்த இளம்பெண், பள்ளி நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பிய கள்ளக்காதலனை, கணவரின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட மனைவி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2020-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கணவரை பிரிந்த இளம்பெண்
இதனால் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். கணவரை பிரிந்த அந்த இளம்பெண் உத்தமபாளையத்தில் உள்ள தனது பெற்றோருடன் இருந்து வந்தார். இதனிடையே தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
கள்ளக்காதல்
இந்நிலையில் அந்த பெண்ணுடன் பள்ளியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராம்நகர் பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தேனிக்கு ஆன்லைன் பொருட்களை விற்பனை செய்ய வந்தபோது இளம்பெண்ணுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்த வாழ்ந்து வருவதை அறிந்த மருதுபாண்டி இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
வீடியோவை கணவனுக்கு அனுப்பி வைத்த க.காதலன்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை மருதுபாண்டி அவருக்கு தெரியாமல் வீடியோக்களை எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோக்களை கணவருக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த இளம்பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்து மருதுபாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

