ஆடு மேய்க்க சென்ற மனைவி.! அரை நிர்வாண கோலத்தில் கண்ட கணவர்.! நடந்தது என்ன?
ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்(35). விவசாயி. இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வழக்கம் போல நித்யா அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில் ஆடுகளை மேய்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஆடுகள் மட்டும் தானாக வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால், நித்யா நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால், பதற்றம் அடைந்த கணவர் விவேகானந்தன் ஓடை பகுதிக்கு சென்று மனைவியை தேடியுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த முட்புதரில் நித்யா அரை நிர்வாண கோலத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து விவேகானந்தன் அதிர்ச்சியில் கதறி அழுததார். மேலும், அவரது உடலில் ரத்த காயங்கள் மற்றும் அவர் அணிந்த செயின் மற்றும் கம்மல்களும் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நித்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடு மேய்க்க சென்ற நித்தியாவை மர்ம நபர் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை திருடிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.