வீடியோ காலில் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்ற இளம்பெண்.. ரூ.6.50 லட்சத்தை பறிகொடுத்த இளைஞர்! எப்படி தெரியுமா?
வீடியோ காலில் உடைகளை கழற்றி நிர்வாணமாக நின்ற இளம்பெண்ணால் இளைஞர் ஒருவர் ரூ.6.50 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் ஆகிய குற்றங்களோடு, இப்போது சைபர் க்ரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரே ஒரு வீடியோ காலுக்கு இளைஞர் ஒருவர் ரூ.6.50 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 39 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் வந்துள்ளது. அந்த இளைஞரும் அந்த அழைப்பை எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் இருந்து பெண் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென ஆடைகளை இல்லாமல் நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அழைப்பை துண்டித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரின் வாட்ஸ் அப் நம்பருக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோவில் நிர்வாணமான ஒரு பெண்ணுடன் தான் வீடியோ காலில் பேசுவதைப் போல காட்சி இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் தனக்கு வந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார்.

வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று பயந்த இளைஞர் பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டார். அப்படியாக மார்ச் 18ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பல கட்டமாக அந்த இளைஞர் சுமார் ரூ.6.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டவும், அதற்கு மேல் பணம் கொடுக்க முடியாமல் அந்த இளைஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அடையாளம் தெரியாத 15 நபர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.