பாதிரியாரின் பாலியல் வக்கிரம்! லேப்டாப்பில் கொட்டி கிடந்த இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள்! அதிர்ச்சி போட்டோஸ்.!
சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80 இளம்பெண்களுடன் பழகி வாட்ஸ் அப் சாட்டிங் செய்து, ஆபாச வீடியோ எடுத்த காமவெறி பிடித்த ஆபாச பாதிரியார் பெனடிக்ட் அன்டோ கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
nagercoil
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக் அன்டோ (29). அப்பகுதியில் உள்ள தேவாயலம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம் ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியானது. மேலும் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடல் முத்தமழை பொழிவது என பல்வேறு காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார்.
இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.
இதன் பேரில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே பாதிரியார் லேப்டாப் சோதனை செய்த போது சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இதை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பிலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.