- Home
- குற்றம்
- 17 வயது சிறுவனுடன் 33 வயது ஆண்ட்டி! பார்க்க கூடாததை பார்த்த மகள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
17 வயது சிறுவனுடன் 33 வயது ஆண்ட்டி! பார்க்க கூடாததை பார்த்த மகள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில், 17 வயது சிறுவனுடனான கள்ளக்காதல் விவகாரம் மகளுக்குத் தெரியவந்ததால், பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹைதராஸ் மாவட்டத்தை அடுத்துள்ள சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்தவர் பிங்கி சர்மா (33). இவருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிங்கி சர்மாவிற்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இருவரும் தனிமையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டில் கணவர் மற்றும் மகள் இல்லாத நேரத்தில் 17 வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து கட்டிலில் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது சிறுமி இதனை பார்த்தது மட்டுமல்லாமல் தனது தந்தையிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார். இதனால் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என பிங்கி சர்மா பயந்துள்ளார்.
வேறு வழியில்லாமல் பெற்ற மகள் என்று கூட பாராமல் தாயும், கள்ளக்காதலனும் சேர்த்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து குழந்தையின் சடலத்தை கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். வீட்டிற்கு வந்த கணவர் மகள் காணவில்லை என்பதால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறையினரை அழைத்து அருகில் இருந்த கிணற்றில் தேடி பார்த்து போது மூட்டை ஒன்று இருந்துள்ளது. அதை பிரித்து பார்த்த போது சிறுமி சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயே மகளை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து பிங்கி சர்மா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.