காதல் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு! மனைவியும், கள்ளக்காதலனும் செய்த கேவலமான செயல்! சிக்கியது எப்படி தெரியுமா?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதல் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக மனைவி சசிகலா மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சத்யராஜ் (27). சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சசிகலாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த ஜானகிராமன்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜானகிராமன் ஓசூரில் வேலை பார்த்து வந்ததாலும் அடிக்கடி ஜம்போதிக்கு வந்து சசிகலாவுடன் உல்லாசமாக இந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் சத்யராஜ் மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி என்னை மன்னித்து விடுங்கள் இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறி சென்னையில் இருக்கும் கணவரை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி கணவரும் சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் வந்து இரவு இறங்கியுள்ளார்.
அப்போது கணவருக்காக காத்திருந்த மனைவி அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டாம் சங்கராபாணி ஆற்றங்கரையில் பேசிவிட்டு உல்லாசமாக இருந்துவிட்டு செல்லலாம் என்று கூறியுள்ளார். அப்போது முன்கூட்டியே அங்கு பதுங்கி இருந்த ஜானகிராமன் திடீரென சத்யராஜ் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சத்யராஜை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கழுத்து அறுக்கப்பட்ட சத்யராஜால் பேச முடியாததால் வெள்ளை தாளில் நடந்த சம்பவங்கள் குறித்து எழுதி போலீசாரிடம் கொடுத்தார். அதில் எனது மனைவி சசிகலாவும் கள்ளக்காதலன் ஜானகி ராமன் ஆகியோர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.