- Home
- குற்றம்
- என் பொண்டாட்டி கூடவே உல்லாசமா இருப்பியா! கள்ளக்காதலி கண்முன்னே கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை! நடந்தது என்ன?
என் பொண்டாட்டி கூடவே உல்லாசமா இருப்பியா! கள்ளக்காதலி கண்முன்னே கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை! நடந்தது என்ன?
கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(29). கார் ஓட்டுநராக உள்ளார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சுரேஷ்குமார் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கள்ளக்காதலி கண்முன்னே சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த விஜயலட்சுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யா தூண்டுதலின் பேரில் சுரேஷ்குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் வீடு புகுந்து டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.