- Home
- குற்றம்
- லாட்ஜில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா.. புதுமண தம்பதியின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்.!
லாட்ஜில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா.. புதுமண தம்பதியின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்.!
லாட்ஜில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா பொருத்தி புதியதாக திருமணமான ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டிய லாட்ஜ் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவுக்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்தபடி அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி தேனிலவை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், புதுமாப்பிள்ளை செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் கோழிக்கோட்டை சோ்ந்த அப்துல் முனீர் (35) பேசுவதாகவும், நீங்கள் மலப்புரத்தில் விடுதியில் மனைவியுடன் தங்கியபோது எடுத்த உங்களின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவரை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். பணம் தருவதாகக் கூறி முனீரை தனியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அப்துல் முனீரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கேமரா, லேப்-டாப் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க;- வேணாம் என்ன விட்டுடு ப்ளீஸ்! நான் உனக்கு அண்ணி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கதறவிட்ட கொழுந்தன்! நடந்தது என்ன?
லாட்ஜில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா பொருத்தி இதுபோல பலரிடம் இவ்வாறு வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, முனீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.