காதலனுடன் தனியாக போன் பேசிய சிறுமி.. தாய் எடுத்த விபரீத முடிவு - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
காதலனுடன் பேசியதற்காக தாய், சகோதரரால் சிறுமி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோனு என்ற பெண் ஏப்ரல் 29 அன்று மன்புரா காட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு, சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களில் போலீசார் வெவ்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்தனர். சோனு ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசுவது அவரது தாய் மற்றும் சகோதரனை எரிச்சலடையச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆத்திரத்தில் கோடரியால் தாக்கி, கொலைக்கான ஆதாரங்களை அழித்துவிட்டு உடலை கிணற்றில் வீசியுள்ளனர். சோனுவின் தாயார் சாந்தி பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த இளைஞனுடன் பேசுவதை நிறுத்துமாறு தனது மகளை சமாதானப்படுத்த முயற்சித்ததாகவும், ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.
அதனால், ஏப்ரல் 26ஆம் தேதி, மதியம், சாந்தி பேகம், சோனுவை கோடரியால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் தனது மகன் ஹனிப்புடன் உடலை கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினார் என்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை